• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மத அடிப்படைவாதிகளுக்கு எதிராக மீண்டும் கருத்து தெரிவித்த நவீன்!

மத அடிப்படைவாதிகளுக்கு எதிராக மீண்டும் கருத்து தெரிவித்த நவீன்!

இயக்குநர் நவீன்

இயக்குநர் நவீன்

நவீன் இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர். நாத்திகர். எல்லா மத அடிப்படைவாதிகளுக்கு எதிராகவும் துணிச்சலாக கருத்து கூறுகிறவர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீன் மீண்டும் மத அடிப்படைவாதிகளுக்கு எதிராக தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

உலகுக்கு இன்று அச்சுறுத்தலாக உள்ளது கொரோனா என்றால் என்றைக்கும் அச்சுறுத்தலாக இருப்பது மத அடிப்படைவாதம். அனைத்து மதங்களிலும் மத அடிப்படைவாதிகள் இருக்கிறார்கள். மதமும், அரசியலும் கலக்கும் போது மத அடிப்படைவாதிகள் தங்கள் சுயரூபத்தை காட்ட ஆரம்பிக்கிறார்கள். இவர்களை அடையாளம் கண்டு அம்பலப்படுத்த வேண்டியது அந்தந்த மதத்தில் உள்ளவர்களின் கடமை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நவீன் இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்நாத்திகர். எல்லா மத அடிப்படைவாதிகளுக்கு எதிராகவும் துணிச்சலாக கருத்து கூறுகிறவர்.

சமீபத்தில், "நீங்கள் அறிவியலும், வரலாறும் படித்தால் போதும். இப்போதுள்ள கடவுள்களும் மதங்களும் இந்த பூமி தோன்ற காரணமல்ல என்பது விளங்கும். வரலாறை குரானிலும் பைபிளிலும் புராணங்களிலும் தேடக் கூடாது" என்று கருத்து தெரிவித்திருந்தார்.



கடவுள் நம்பிக்கையாளர்கள் இதற்காக நவீனுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்தனர்

Also read... ரஷ்யாவில் அஜித் - வைரலாகும் புகைப்படங்கள்...!

இந்நிலையில், நடிகர் நஸ்ருதீன் ஷா, "இந்திய இஸ்லாமியர்கள் தலிபான்களை கொண்டாடுவது ஆபத்தானது" என்று கூறியிருந்ததை மேற்கோள் காட்டி, "மதம் வேறு, மத அடிப்படைவாதம் வேறு. மதம் தனிமனித நம்பிக்கை. மத அடிப்படைவாதம் என்பது ஒரு சிறு கூட்டம் ஒரு பெருங்கூட்டத்தை அவர்களின் உரிமைகளை மறுத்து கட்டுப்படுத்துவது. அங்கு தனி மனித சுதந்திரம் பறிக்கப்படுகிறது. சர்வாதிகாரம் பிறக்கிறது. மத அடிப்படைவாதிகள் எதிர்க்கப்பட வேண்டியவர்கள்" என கூறியுள்ளார்



தீவிர மதப்பற்றே மத அடிப்படைவாதமாக பரிமாணம் கொள்கிறது என்பதையும் அவர் சேர்த்து கூறியிருக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: