ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கடவுள்ன்னு ஒருத்தர் இருந்திருந்தா... விஜய் ஆண்டனியின் ட்வீட்டுக்கு இயக்குநர் நவீன் பதில்

கடவுள்ன்னு ஒருத்தர் இருந்திருந்தா... விஜய் ஆண்டனியின் ட்வீட்டுக்கு இயக்குநர் நவீன் பதில்

நவீன் - விஜய் ஆண்டனி

நவீன் - விஜய் ஆண்டனி

கடவுள்னு ஒருத்தர் இருந்திருந்தா நீங்க கேக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது தோழர் விஜய் ஆண்டனி.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    கடவுள் கண் முன் வந்தால் என்ன கேட்பீர்கள் என்ற விஜய் ஆண்டனியின் ட்வீட்டுக்கு, கடவுள்ன்னு ஒருத்தர் இருந்திருந்தால் இந்த கேள்வியே வந்திருக்காது என பதிலளித்துள்ளார் இயக்குநர் நவீன்.

    தமிழ் படம் புகழ் இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில், தற்போது விஜய் ஆண்டனி நடித்து வரும் படம், ‘ரத்தம்’. இதில், மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

    அதிஷா வசனம் எழுதும் இந்தப் படத்துக்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார். கண்ணன் இசையமைக்கிறார். இதன் கடைசிக்கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்து வந்தது. அங்கு ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இதைத் தொடர்ந்து ரத்தம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது என்றும், விரைவில் படம் வெளியாகும் எனவும் சி.எஸ்.அமுதன் தெரிவித்திருந்தார். தவிர, பிச்சைக்காரன் 2, மழை பிடிக்காத மனிதன், கொலை உள்ளிட்ட படங்களையும் கைவசம் வைத்துள்ளார் விஜய் ஆண்டனி.

    இரட்டை குழந்தைகளுக்கு பாலூட்டும் படத்தைப் பகிர்ந்த சின்மயி!

    இதற்கிடையே அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடவுள் என் முன்னாடி வந்தா, ஜாதி மதம் கோயில் சாமியார் எல்லாரையும் உலகத்துல இருந்து எடுத்துட்டு, வறுமை கொலை கொள்ளைய ஒழிசிட்டு, பேசாம நீங்க எங்க கூடவே இருந்துருங்க சார்ன்னு, request-ஆ கேப்பேன். நீங்க என்ன கேப்பிங்க?” எனப் பதிவிட்டிருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    விஜய்யின் அந்த ட்வீட்டை ரீ-ட்வீட் செய்து, ”கடவுள்னு ஒருத்தர் இருந்திருந்தா நீங்க கேக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது தோழர் விஜய் ஆண்டனி. மனிதர்கள் உருவாக்கிய கேடுகளை மனிதர்கள்தான் அழித்தகற்ற வேண்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் நவீன்.

    நவீனின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த அக்னி சிறகுகள் திரைப்படம் நீண்ட காலமாக தயாரிப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Published by:Shalini C
    First published:

    Tags: Vijay Antony