ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Vijay: விஜய்யை வைத்து ஜேம்ஸ் பாண்ட் போன்ற கதையை இயக்க விரும்பும் பிரபல இயக்குநர்!

Vijay: விஜய்யை வைத்து ஜேம்ஸ் பாண்ட் போன்ற கதையை இயக்க விரும்பும் பிரபல இயக்குநர்!

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

ஏற்கனவே செல்வராகவன் ஒருமுறை விஜய்யுடன் ஸ்பை திரில்லர் படம் இயக்க விரும்புவதாக கூறியிருந்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நடிகர் விஜய்யுடன் இணைந்து ஜேம்ஸ்பாண்ட் மாதிரியான ஒரு படத்தை உருவாக்க விரும்புவதாக இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

  நேற்று ட்விட்டர் ஸ்பேஸஸ் தளத்தில் ரசிகர்களுடன் இயக்குனர் மிஷ்கின் உரையாடினார். அப்போது அவரிடம் நடிகர் விஜய் உடன் இணைந்து செயல்பட்டால் என்ன மாதிரியான படத்தை இயக்குவீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

  அதற்கு பதிலளித்த அவர் ஜேம்ஸ்பாண்டு மாதிரியான ஒரு படத்தை இவருடன் இணைந்து உருவாக்க விரும்புவதாக தெரிவித்தார். ஏற்கனவே செல்வராகவன் ஒருமுறை விஜய்யுடன் ஸ்பை திரில்லர் படம் இயக்க விரும்புவதாக கூறியிருந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இறுதியாக உதயநிதி ஸ்டாலினை வைத்து சைக்கோ படத்தை இயக்கிய மிஷ்கின் தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையே துப்பறிவாளன் 2 படத்தில் விஷாலுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அதிலிருந்து விலகினார்.

  இதற்கிடையே விஜய் தனது 65-வது படத்தில் நடித்து வருகிறார். ‘பீஸ்ட்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Vijay, Director mysskin