Home /News /entertainment /

ராம், நிவின்பாலி படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு விசிட் அடித்த மிஷ்கின்

ராம், நிவின்பாலி படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு விசிட் அடித்த மிஷ்கின்

பெயரிடப்படாத இந்தப் படத்தில் அஞ்சலி, சூரி முக்கியமான வேடத்தில் நடிக்கின்றனர்.

பெயரிடப்படாத இந்தப் படத்தில் அஞ்சலி, சூரி முக்கியமான வேடத்தில் நடிக்கின்றனர்.

பெயரிடப்படாத இந்தப் படத்தில் அஞ்சலி, சூரி முக்கியமான வேடத்தில் நடிக்கின்றனர்.

ராம் இயக்கத்தில் நிவின்பாலி நடித்துவரும் படத்தின் படப்பிடிப்புத்தளத்திற்கு இயக்குனர் மிஷ்கின் சென்ற போது எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ராம் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மம்முட்டி நடித்த பேரன்பு. இத்திரைப்படம் தமிழைவிட கேரளாவில் அதிக வரவேற்பை பெற்றது. பேரன்பிற்கு நேர்மறையான விமர்சனங்கள் மலையாளத்தில் எழுதப்பட்டன. மலையாள திரையுலகை பொறுத்தவரை ராம் தமிழின் முக்கியமான இயக்குனர். இந்த பிம்பமே ரிச்சி படத்தின் தோல்விக்குப் பிறகு தமிழில் படம் நடிக்காமல் இருந்த நிவின்பாலியை மீண்டும் தமிழில் நடிக்க வைத்தது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் அஞ்சலி, சூரி முக்கியமான வேடத்தில் நடிக்கின்றனர்.



மாநாடு படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. ரயில் நிலையம் போன்று அமைக்கப்பட்ட அரங்கில் நிவின்பாலி, சூரி சம்பந்தப்பட்ட காட்சிகளை ராம் எடுத்து வருகிறார்.



அந்த அரங்குக்கு இயக்குனர் மிஷ்கின் விசிட் அடித்துள்ளார். படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் அப்போது உடன் இருந்துள்ளார். இயக்குனர் ராமும், மிஷ்கினும் வாடா போடா நண்பர்கள். மிஷ்கினின் சகோதரர் இயக்கிய சவரக்கத்தி திரைப்படத்தில் ராம் கதாநாயகனாக நடித்திருந்தார்.



இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியதோடு ஒரு முக்கிய வேடத்தில் மிஷ்கினும் நடித்திருந்தார். பரஸ்பர நட்பு காரணமாக இந்த சந்திப்பு நடந்துள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. ருகிறது.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Nivin Pauly

அடுத்த செய்தி