ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Thalapathy 67: தளபதி 67 படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் பிரபல இயக்குநர்?

Thalapathy 67: தளபதி 67 படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் பிரபல இயக்குநர்?

விஜய் - லோகேஷ் கனகராஜ்

விஜய் - லோகேஷ் கனகராஜ்

மிஷ்கின் தான் இயக்கியப் படங்களை தவிர, 'சவரக்கத்தி' மற்றும் 'சூப்பர் டீலக்ஸ்' போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    நடிகர் விஜய்யின் 67-வது படத்தில் இயக்குநர் மிஷ்கின் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் விஜய்யின் 'தளபதி 67' படத்தை இயக்கவுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. தளபதி 67 படத்தில் வில்லனாக நடிக்க இயக்குனர் கௌதம் மேனனை அணுகியதாக கூறப்பட்ட நிலையில், இப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்க இயக்குனர் மிஷ்கின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மிஷ்கின் தான் இயக்கியப் படங்களை தவிர, 'சவரக்கத்தி' மற்றும் 'சூப்பர் டீலக்ஸ்' போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். அதோடு விக்ராந்த் நடித்த 'சுட்டு பிடிக்க உத்தரவு' படத்திலும், ஜி.வி.பிரகாஷின் பேச்சிலர் படத்திலும் நடித்திருந்தார்.

    விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் 'தளபதி 67' திரைப்படம் விரைவில் தொடங்கும் என்றும் அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நடிக்க நடிகர்கள் பிரித்விராஜ் சுகுமாரன், அர்ஜுன், சஞ்சய் தத் மற்றும் பலரிடம் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    7 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் ரிலீசாகும் 'இடம் பொருள் ஏவல்'!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நடிகர் விஜய் தற்போது வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Thalapathy Vijay