துப்பறிவாளன் 2 படத்திலிருந்து மிஷ்கின் விலகல்... விஷாலுடன் பட்ஜெட் மோதலா?

துப்பறிவாளன் 2 படத்திலிருந்து மிஷ்கின் விலகல்... விஷாலுடன் பட்ஜெட் மோதலா?
விஷால் - மிஷ்கின் - இளையராஜா
  • Share this:
துப்பறிவாளன் 2 படத்திலிருந்து இயக்குநர் மிஷ்கின் நீக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து கடந்த 2017-ம் ஆண்டு வெளியான படம் துப்பறிவாளன். ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவான இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. பிரசன்னா, அனு இம்மானுவேல், ஆன்ட்ரியா, வினய் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்தில் விஷாலின் கணியன் பூங்குன்றன் என்ற கதாபாத்திரம் பலரால் பேசப்பட்டது.

முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகளில் படக்குழு ஈடுபட்டது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் துவங்கி நடைபெற்று வந்தது. இதில் விஷாலுடன் பிரசன்னா, கெளதமி, ரகுமான், அஷ்யா உள்ளிட்டோர் நடிக்க இளையராஜா படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமானார்.


இந்நிலையில் இந்தப் படத்தின் பட்ஜெட் அதிகமானதால் திட்டமிட்ட பட்ஜெட்டை விட அதிக பொருட் செலவில் படத்தை இயக்கியவரும் மிஷ்கினை படத்திலிருந்து நீக்கி விட்டு நடிகரும் தயாரிப்பாளருமான விஷாலே எஞ்சியுள்ள திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து மிஷ்கின் மற்றும் விஷால் திறப்பு இன்னும் வாய் திறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதுகுறித்து மிஷ்கின் மற்றும் விஷால் திறப்பு இன்னும் வாய் திறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து : கிரேன் ஆபரேட்டருக்கு ஜாமின் - விசாரணை அதிகாரியாக நாகஜோதி நியமனம்!
First published: February 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்