முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / -12 டிகிரி குளிரில் ஷூட்டிங்.. விஜய்-க்கு நன்றி.. லோகேஷ்க்கு அன்பு முத்தம்.. லியோ அப்டேட் கொடுத்த மிஷ்கின்

-12 டிகிரி குளிரில் ஷூட்டிங்.. விஜய்-க்கு நன்றி.. லோகேஷ்க்கு அன்பு முத்தம்.. லியோ அப்டேட் கொடுத்த மிஷ்கின்

மாதிரி படம்

மாதிரி படம்

Director Mysskin in LEO | லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் என இயக்குநர் மிஷ்கின் நம்பிக்கை தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய்யின் லியோ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிவிட்டேன் என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ' படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தன்னுடைய பகுதி படப்பிடிப்பை நிறைவு செய்து விட்டு காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புகிறேன் என லியோ படத்தில் நடித்த இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இயக்குநர் மிஷ்கின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புகிறேன் என்றும் -12 டிகிரியில் 500 பேர் கொண்ட லியோ படக்குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தனர் என்றும் சண்டை பயிற்சியாளர் அன்பறிவு மிகச்சிறந்த ஒரு சண்டை காட்சியை படமாக்கினார்கள் என பாராட்டினார்.

மேலும் உதவி இயக்குநர்களில் ஓயாத உழைப்பும் என்மேல் அவர்கள் செலுத்திய அன்பும் என்னை ஆச்சரியப்பட வைத்தது என நெகிழ்ந்த மிஷ்கின், படத்தின் தயாரிப்பாளர் லலித் அந்த குளிரிலும் ஒரு சக தொழிலாளியாக உழைத்துக் கொண்டிருந்தார் என பாராட்டு தெரிவித்தார்.

என் லோகேஷ் கனகராஜ் ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குநராக அன்பாகவும் கண்டிப்பாகவும் ஒத்த சிந்தனையுடனும் ஒரு பெரும் வீரனைப்போல் களத்தில் இயங்கிக் கொண்டிருந்தான் என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத்தழுவினான் அவன் நெற்றில் நான் முத்தமிட்டேன் என்றார்.

என் அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இந்த படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன். அவர் என்னுடன் பண்பாக நடந்துகொண்ட விதத்தையும் அவர் அன்பையும் நான் என்றும் மறவேன் லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்தார்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Director mysskin, Kashmir, Lokesh Kanagaraj