சினிமா இல்லாமல் வாழ முடியாது... செத்து விடுவோம் - இயக்குநர் மிஷ்கின்

இயக்குநர் மிஷ்கின்

இந்த 7 மாதங்களாக நாம் எல்லாருமே பேயாகத்தான் இருந்தோம். இப்போது தான் மனிதர்களாக உலாவுகிறோம்.

  • Share this:
சாப்பாடு இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம் ஆனால் சினிமா இல்லாமல் வாழ முடியாது என்று இயக்குநர் மிஷ்கின் கூறியுள்ளார்.

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு ஹீரோவாகவும், மாளவிகா மேனன் ஹீரோயினாகவும் நடித்துள்ள படம் ‘பேய்மாமா’. மேலும் எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன், மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, மனோபாலா, ரேகா, கோவை சரளா, ரமேஷ் கண்ணா, வையாபுரி, சிங்கம்புலி, பவர்ஸ்டார், அனுமோகன், பாஸ்கி, சாம்ஸ், லொள்ளுசபா மனோகர், அபிஷேக், பேபி சவி என ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

‘பேய்மாமா’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், “16 வருடத்திற்கு முன்பு நான் ஒரு படிக்கட்டு ஏறி ஒரு இசை அமைப்பாளரைச் சந்திக்கும் முன் நான் சந்தித்த ஒரு பெரிய இயக்குநர் சக்தி சிதம்பரம். எங்கு பார்த்தாலும் அன்போடு பேசக்கூடியவர். இன்றைய நாளில் ஒரு புதுப்பட இயக்குநர் போல ஓடிக்கொண்டிருக்கிறார். எனக்கு காமெடிப் படம் ரொம்பப்படம் பிடிக்கும். பேய்மாமா படத்தைப் பார்க்கும் போது சந்தோசமாக இருக்கிறது. இப்படியொரு படம் எடுக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.

யோகிபாபுவை நான் இதுவரை நேரில் சந்தித்தது இல்லை. அவரிடம் எப்படிப் பேசுவது என்று சிந்திக்கும் போது, அந்தத் தம்பி என்னிடம் நேராக வந்து, நான் உங்களின் ரசிகன் என்றார். இந்த எளிமை வாழ்நாள் முழுதும் அவரை நல்லா வைக்கும்.

மேலும் படிக்க: நன்றி... வணக்கம் என்பதற்கு அர்த்தம் இதுதான் - விஜய்சேதுபதி பளீர் பேட்டி

இந்த 7 மாதங்களாக நாம் எல்லாருமே பேயாகத்தான் இருந்தோம். இப்போது தான் மனிதர்களாக உலாவுகிறோம். அதற்கான காரணமாக இந்த விழாவும் படமும் இருக்கிறது. அதனாலே இந்தப் படமும் பெரியதாக வெற்றி பெற வேண்டும். சாப்பாடு இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம். ஆனால் சினிமா இல்லாமல் வாழ முடியாது. செத்துப் போய் விடுவோம்”. என்றார்
Published by:Sheik Hanifah
First published: