முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / "முதலில் என்னை அடித்துவிட்டு பிறகு கட்டியணைத்தார் விஜய்... "- லியோ சூட்டிங் சுவாரஸ்யம் பகிர்ந்த மிஷ்கின்!

"முதலில் என்னை அடித்துவிட்டு பிறகு கட்டியணைத்தார் விஜய்... "- லியோ சூட்டிங் சுவாரஸ்யம் பகிர்ந்த மிஷ்கின்!

மிஷ்கின் - விஜய்

மிஷ்கின் - விஜய்

மாஸ்டர் வெற்றிக்கு பின்னர் லோகேஷ் – விஜய் கூட்டணி இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India
  • Editor default picture
    reported by :
  • Editor default picture
    published by :Musthak

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தின் ஷூட்டிங்கில் நடந்த சம்பவங்கள் குறித்து இயக்குனர் மிஷ்கின் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. விக்ரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் த்ரிஷா, அர்ஜுன், மிஷ்கின், கவுதம் மேனன், மன்சூர் அலி கான் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

துப்பாக்கி, கத்தி, பீஸ்ட், மாஸ்டர் படங்களைத் தொடர்ந்து லியோ படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பாக லலித் குமார், ஜெக்தீஷ் ஆகியோர் படத்தை தயாரிக்கின்றனர். மாஸ்டர் வெற்றிக்கு பின்னர் லோகேஷ் – விஜய் கூட்டணி இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தில் விஜய்க்கும், மிஷ்கினுக்கும் இடையே சண்டைக் காட்சி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் லியோ படத்தின் ஷூட்டிங்கில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக மிஷ்கின் நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது- எனக்கும் விஜய்க்கும் படத்தில் சண்டைக் காட்சி உள்ளது. இதற்கான ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பாக விஜய் என்னிடம், எனக்கு காயம் ஏதும் ஏற்பட்டு விடாமல் கவனமாக இருங்கள் என்றார். ஷாட்டில் அவர் என்னை அடிப்பது போல் காட்சி இருக்கும். நான் ஓகே, ஆல் ரைட் என்றேன். அவர் என்னை தாக்குவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. அவை முடிந்ததும் ஓடோடி வந்து என்னை கட்டியணைத்தார். எனக்கு காயம் ஏதும் ஏற்பட்டு விட்டதா என அக்கறையோடு விசாரித்து, என்னை தாக்கியதற்காக வருத்தப்பட்டார். என்று கூறினார். லியோ திரைப்படம் அக்டோபர் 19-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

First published:

Tags: Actor Vijay, Director mysskin