இயக்குநர் பாலா செய்த உதவிக்கு நெகிழ்ந்து நன்றி சொன்ன மிஷ்கின்..

இயக்குநர் பாலா மற்றும் மிஷ்கின்

இயக்குநரும் தயாரிப்பாளருமான பாலாவுக்கு மிஷ்கின் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

 • Share this:
  பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான படம் ‘பிசாசு’. நாகா, ராதாரவி, ப்ரயாகா மார்டின் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது.

  தற்போது இந்தப் படத்தின் 2-ஆம் பாகம் உருவாக இருப்பதை சமீபத்தில் தனது பிறந்தநாளன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் மிஷ்கின். இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க ஆன்ட்ரியா ஒப்பந்தமாகியுள்ளார். ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். மிஷ்கின் - கார்த்திக் ராஜா கூட்டணி இணையும் முதல் படமாக இத்திரைப்படம் அமைந்துள்ளது. நவம்பர் மாதத்திலிருந்து படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு முடிவு செய்திருக்கிறது.  இந்நிலையில் பாலாவின் தயாரிப்பு நிறுவனத்துக்குச் சொந்தமான ‘பிசாசு’ டைட்டிலை தனக்கு வழங்கியதற்காக இயக்குநர் மிஷ்கின் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.  அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, “நான் ஒரு மனிதருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அது நான் மிகவும் நேசிக்கின்ற மகா கலைஞனான என் பாலா 'பிசாசு 2' இயக்கப்போகிறேன் என்று சொன்னவுடன் உடனடியாக அவருக்கு சொந்தமான டைட்டிலை எனக்கு வழங்கிய பாலாவின் நெற்றியில் என் அன்பான முத்தங்களை பதிக்கிறேன்” இவ்வாறு மிஷ்கின் கூறியுள்ளார்.
  Published by:Sheik Hanifah
  First published: