மசாலா படங்களுக்கும், பம்மாத்துப் படங்களுக்கும் நடுவே ஒரு மேன்மையான படத்தை தந்த சீனு ராமசாமிக்கு என் மனதின் ஆழத்திலிருந்து நன்றி என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வெள்ளிகிழமை வெளியான படம் மாமனிதன். இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் கிடைத்திருக்கின்றன. இருந்தாலும் ஒரு குடும்பத்தின் பின்னணியில் ஒரு மனிதனின் பயணத்தை மிக நேர்த்தியாக படமாக்கி இருப்பதாக திரைத்துறையினர் பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது இயக்குநர் மிஷ்கின் மாமனிதன் திரைப்படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளார். அதில் எல்லா சாமானியர்களின் வாழ்க்கையிலும் விதி எனும் சூறாவளி அவ்வபோது வாழ்க்கையை உடைத்துப் போடுகிறது. மாமனிதன் கதையில் ராதாகிருஷ்ணன் என்ற சாமானியனின் வாழ்க்கை ஒரு கயவனால் உடைக்கப்படுகிறது. ராதாகிருஷ்ணன் ஓடுகிறான். வழியில் அவன் சந்திக்கும் மனிதர்கள், நிகழ்வுகள் அனைத்தும் மீண்டும் ஒரு முழு மனிதனாக்குகிறது, எனக் கூறியுள்ளார்.
மிக எளிமையாக எடுக்கப்பட்ட ஒரு அன்பு சித்திரம் மாமனிதன். இந்தப் படம் தன் சிந்தனைகளை மேம்படுத்துகிறது, தன் வாழ்க்கையை அர்த்தப்பட வைக்கிறது என மிஷ்கின் பாராட்டியுள்ளார்.
Also read... கண்ணதாசன் ஆத்திகரான கதையைச் சொன்ன ரஜினி
மசாலா படங்களுக்கும், பம்மாத்துப் படங்களுக்கும் நடுவே ஒரு மேன்மையான படத்தை தந்த சீனு ராமசாமிக்கு என் மனதின் ஆழத்திலிருந்து நன்றிகள் எனவும் இயக்குனர் மிஷ்கின் கூறியுள்ளார்.
ஏற்கனவே ஷங்கர், பாரதிராஜா உள்ளிட்ட பல இயக்குனர்களும் திரை பிரபலங்களும் மாமனிதன் திரைப்படத்தை பாராட்டி வந்தனர். இந்த நிலையில் இயக்குனர் மிஷ்கினும் மாமனிதன் படத்தை புகழ்ந்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Vijay Sethupathi, Director mysskin, Seenu ramasamy