Home /News /entertainment /

சினிமாவில் கேளிக்கை அதிகமாகிவிட்டன - இயக்குநர் மிஷ்கின் வருத்தம்

சினிமாவில் கேளிக்கை அதிகமாகிவிட்டன - இயக்குநர் மிஷ்கின் வருத்தம்

இயக்குநர் மிஷ்கின்

இயக்குநர் மிஷ்கின்

6 சண்டை காட்சி வைத்துக் கொண்டு படத்தை எடுத்து வெற்றி பெற்று விடலாம் என்று இயக்குனர்கள் எண்ண கூடாது என மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
    சினிமாவில் கேளிக்கை அதிகமாகிவிட்டன என இயக்குநர் மிஷ்கின் வருத்தம் தெரிவித்துள்ளார்.

    அதர்வா - பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ள குருதி ஆட்டம் திரைப்படத்தை ஸ்ரீ கணேஷ் இயக்க, ராக்போர்ட் முருகானந்தம் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

    அதில் அதர்வா, இயக்குநர் ஸ்ரீ கணேஷ் உள்ளிட்ட படக்குழுவினரும், இயக்குநர் மிஷ்கின் தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.



    நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீ கணேஷ் 8 தோட்டாக்கள் படம் வெளியானவுடன் இந்த திரைப்படத்தை இயக்க ஒப்பந்தமானதாகவும்,  கதை எழுத ஒரு வருடம் எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்தார். அத்துடன் இந்தப் படம் சிறப்பாக வந்துள்ளதாகவும், அனைவருக்கும் படத்தை காட்ட ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

    அதேபோல் அதர்வா பேசுகையில் இந்தப் படத்தில் தான் ஹீரோவாக இருந்தாலும்,  ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து இயக்குநர் படத்தை உருவாக்கியுள்ளார். அது படத்திற்கு பெரும் பலமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

    அதேபோல் இயக்குநர் மிஷ்கின் பேசுவையில் திரைப்படங்களில் கேளிக்கைகள் அதிகமாகி விட்டன.  அவ்வாறு இருக்கக் கூடாது. வாழ்வியலை சினிமா பிரதிபலிக்க வேண்டும் என சுட்டி காட்டினார்.

    கேளிக்கை என்பது திரைப்படங்களில் 10% மட்டுமே இருக்க வேண்டும், மற்றவை அந்தப் படத்தில் இருந்து ரசிகர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை கற்றுக் கொள்ள வேண்டும் அல்லது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என கூறினார்.

    Also read... திருச்சியில் ரசிகர்களை சந்தித்த அஜித் - வைரலாகும் போட்டோஸ்

    மேலும் 6 சண்டை காட்சி வைத்துக் கொண்டு படத்தை எடுத்து வெற்றி பெற்று விடலாம் என்று இயக்குனர்கள் எண்ண கூடாது எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் தன்னிடம் உதவி இயக்குனர்களாக பணி சேர்பவர்களுக்கு முதலில் குடிக்க கற்று தருவேன்.  அப்போதுதான் அவர்களுக்குள் இருக்கும் உணர்வுகள் வெளிப்படையாக தெரிய வரும் எனவும் கூறினார். அந்த வகையில் குருதி ஆட்டம் திரைப்படம் நிச்சயம் நல்ல திரைப்படமாக இருக்கும் என கூறினார்.

    இந்த படத்தை இயக்கியுள்ள ஸ்ரீ கணேஷ் இயக்குனர் மிஸ்கின் இடம் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. குருதி ஆட்டம் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி திரைக்கு வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Mysskin

    அடுத்த செய்தி