ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Taapsee Pannu : தாப்ஸி படத்தின் கதைக்காக நந்தா பெரியசாமியை பாராட்டிய மிஷ்கின்..

Taapsee Pannu : தாப்ஸி படத்தின் கதைக்காக நந்தா பெரியசாமியை பாராட்டிய மிஷ்கின்..

தாப்ஸி

தாப்ஸி

Taapsee Pannu : இந்தியில் கதாசிரியராக முதல் வெற்றியை பெற்றிருக்கும் நந்தா பெரியசாமிக்கு இதயப்பூர்வமான பாராட்டுகள்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தாப்ஸி நடித்திருக்கும் ராஷ்மி ராக்கெட் திரைப்படம் ஸி 5 ஓடிடியில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்காக இயக்குனர் நந்தா பெரியசாமியை பாராட்டியுள்ளார் இயக்குனர் மிஷ்கின்.

ஒரு கல்லூரியின் கதை படத்தின் மூலம் இயக்குனரானவர் நந்தா பெரியசாமி. அடுத்து இவர் இயக்கிய படங்கள் எதுவும் ரசிகர்களை கவராமல் போனது. தற்போது ஆனந்தம் விளையாடும் வீடு படத்தை எடுத்து வருகிறார். இவர் இந்திப் படம் ஒன்றுக்கு கதை எழுதினார். அதுதான் தாப்ஸி நடித்திருக்கும் ராஷ்மி ராக்கெட். விளையாட்டை மையப்படுத்திய படம் இது. இதன் கதையை மட்டும் நந்தா பெரியசாமி எழுதியிருந்தார். இயக்கம் வேறொருவர்.

படத்தையும், படத்தின் கதையையும், அதை எழுதிய நந்தா பெரியசாமியையும் வடஇந்திய ஊடகங்கள் பெயர் குறிப்பிட்டு பாராட்டியுள்ளன. ஆனால், தமிழ் திரையுலகைச் சேர்ந்த யாரும் இதுவரை சின்னதாகக்கூட பாராட்டு தெரிவிக்கவில்லை என குறைபட்டுக் கொண்டார் நந்தா பெரியசாமி.

also read : போதைப் பொருள் விசாரணையில் அனன்யா பாண்டே - விஜய் படத்திலிருந்து நீக்கம்?

இதனை அவர் சொல்லி ஒருநாள்தான் ஆகிறது. அதற்குள் மிஷ்கினிடமிருந்து பாராட்டு கிடைத்துள்ளது. 'இந்தியில் கதாசிரியராக முதல் வெற்றியை பெற்றிருக்கும் நந்தா பெரியசாமிக்கு இதயப்பூர்வமான பாராட்டுகள். அவர் மேலும் பல நல்ல கதைகள் எழுதவும், நல்ல படங்கள் இயக்கவும் வாழ்த்துகள்' என தெரிவித்துள்ளார். இந்த ட்வீட்டை எடுத்துப் போட்டு சமுத்திரக்கனி, 'வென்றாய் தோழா... வாழ்த்துகள்' என பாராட்டியுள்ளார்

வாழ்த்தையும், பாராட்டையும்கூட கேட்டுத் தான் தமிழ் சினிமாவில் வாங்க வேண்டியிருக்கிறது.  

First published:

Tags: Bollywood, Taapsee Pannu