ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இசையமைப்பாளராக மாறும் இயக்குநர் மிஷ்கின்

இசையமைப்பாளராக மாறும் இயக்குநர் மிஷ்கின்

மிஷ்கின், ஆதித்யா

மிஷ்கின், ஆதித்யா

இயக்குனர் மிஷ்கின் டெவில் என்ற திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். அந்தப் படத்தை மிஷ்கின் சகோதரர் ஆதித்யா இயக்குகிறார். 

  • News18
  • 1 minute read
  • Last Updated :

இயக்குனர் மிஷ்கின் தன்னுடைய சகோதரர் இயக்கும் டெவில் திரைப்படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். 

சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். அதன்பின் அஞ்சாதே, யுத்தம் செய்,  பிசாசு, துப்பறிவாளன் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கினார்.

இவர் இயக்கத்தில் தற்போது பிசாசு-2 படம் உருவாகி வருகிறது. இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தை தாண்டி, பாடல் எழுதுவது, பாடுவது என பல்வேறு துறைகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். அதேபோல் தன்னுடைய படங்களில் இடம்பெறும் பின்னணி இசைக்கும் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.

இந்த நிலையில் தன்னுடைய சகோதரரும், சவரக் கத்தி திரைப்படத்தின் இயக்குனருமான ஆதித்யா இயக்கும் டெவில் என்ற திரைப்படத்தின் மூலம் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

Also read... ஜூலையில் வெளியாகிறது ஆண்ட்ரியா நடித்துள்ள வட்டம்

இந்த படத்தில் இடம்பெறும் நான்கு பாடல்களை இசை அமைத்துக் கொடுத்துள்ளார்.  அதற்கான படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. விதார்த் - பூர்ணா நடிக்கும் டெவில்  திரைப்படத்திற்கான பாடல்களை விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

தமிழ்சினிமாவில் குறிப்பிட்ட சில இயக்குனர்கள் மட்டுமே இசையமைப்பாளராகவும் சாதித்துள்ளனர். அதில் டி.ராஜேந்தர் மிக முக்கியமானவர். அந்த வரிசையில் தற்போது மிஷ்கின் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Director mysskin