ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

உதயநிதி தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் - இயக்குநர் மிஷ்கின்!

உதயநிதி தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் - இயக்குநர் மிஷ்கின்!

கலகத் தலைவன் திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

கலகத் தலைவன் திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

உதயநிதி ஸ்டாலின் திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் மிஷ்கின் கோரிக்கை.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உதயநிதி ஸ்டாலின் திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என இயக்குனர் மிஷ்கின் கோரிக்கை வைத்துள்ளார். 

மகிழ் திருமணி இயக்கத்தின் உதயநிதி நடித்திருக்கும் கலகத் தலைவன் திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது.

அதில் படக்குழுவினருடன் இயக்குனர்கள் மிஷ்கின், சுந்தர்.சி, ராஜேஷ்.எம், நடிகர்கள் அருண் விஜய், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அந்த விழாவில் பேசிய பலரும் உதயநிதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவர் என்பதை மறைமுகமாக பேசினர்.  இந்த நிலையில் இயக்குனர் மிஷ்கின் பேசுகையில், உதயநிதி ஸ்டாலின் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்துவதாக கூறிக் கொண்டிருக்கிறார்.  ஆனால் அவர் வருடத்தில் 100 நாட்கள் திரைப்படங்களில் நடிக்க வேண்டும். அவர் இயக்குனர்களின் நடிகர் என குறிப்பிட்டார்.  அத்துடன் பண்பானவர் எனவும் பாராட்டினார்.

தன்னுடைய சைக்கோ திரைப்படத்தில் நடிக்கும் போது, தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதன் காரணமாக 2 மணி நேரம், 6 மணி நேரம் என குறைந்த அளவில் மட்டுமே படப்பிடிப்பிற்கு நேரம் ஒதுக்குவார்.  கடுமையாக உழைத்தார், அவர் இன்னும் உயரத்துக்கு செல்வார், கழகத்தின் தலைவனாக உயர்வார் எனவும் கூறினார்.

அதேபோல் கலகத் தலைவன் படத்தின் இயக்குனர் பேசுகையில், இந்த திரைப்படத்தில் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் பணியாற்றியதாக மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் கலகத் தலைவன் அனைவரையும் கவரும் என நம்புவதாகவும் மகிழ் திருமேனி கூறினார்.

Also read... நீயே மண் மின்னும் வெண்தாரகை... நடிகை தமன்னாவின் நியூ ஆல்பம்!

இறுதியாக பேசிய உதயநிதி ஸ்டாலின், தடம் திரைப்படம் நான் நடிக்க வேண்டியது. ஆனால் செண்பகமூர்த்தி கதை நல்லா இல்லை என கூறிவிட்டார். அதன் காரணமாக அந்த படத்தில் நடிப்பதை தவிர்த்து விட்டேன்.  ஆனால் படம் பார்க்கும் பொழுது சூப்பராக இருந்தது, எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் தடம் என கூறினார். எனவேதான் இந்த திரைப்படத்தை உடனடியாக தொடங்க வற்புறுத்தினேன் என உதயநிதி ஸ்டாலின் கூறினார்.  இதைத்தொடர்ந்து கலகத் தலைவன் படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Director mysskin, Udhayanidhi Stalin