ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இசையமைப்பாளராக மிஷ்கின்.. 'டெவில்' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்!

இசையமைப்பாளராக மிஷ்கின்.. 'டெவில்' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்!

டெவில் திரைப்பட குழுவினர்

டெவில் திரைப்பட குழுவினர்

இயக்குநர் மிஷ்கினின் சகோதரர் ஆதித்யா இயக்கம் திரைப்படம் டெவில். இந்த திரைப்படத்தில் விதார்த், பூர்ணா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து நடிக்கும் டெவில் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

  இயக்குநர் மிஷ்கினின் சகோதரர் ஆதித்யா இயக்கும் திரைப்படம் டெவில். இந்த திரைப்படத்தில் விதார்த், பூர்ணா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அதேபோல் இயக்குனர் மிஷ்கின், இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். அத்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

  இந்தப் படத்தின் ஷூட்டிங் சில மதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்றுடன் டெவில் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த திரைப்படம் வித்தியாசமான த்ரில்லர் வைகையில் எடுக்கப்பட்டுள்ளது.  அதற்கு மிஷ்கின் இசை முக்கிய பங்காற்றும் என படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.

  இந்தப் படத்தின் இயக்குநர் ஆதித்யா, ஏற்கனவே சவரகத்தி என்ற படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படத்தில் இயக்குனர்கள் ராம் மற்றும் மிஷ்கின் இணைந்து நடித்திருந்தனர்.

  பிசாசு:

  இதற்கிடையே மிஷ்கின் தற்போது பிசாசு படத்தை இயக்கியுள்ளார். அப்படம் ரிலீசுக்காக தயாராகி வருகிறது. 2014 -ம் ஆண்டு வெளிவந்தது பிசாசு திரைப்படம் அதன் தொடர்ச்சியாக பிசாசு 2 என இரண்டாம் பாகம் தயாரிக்கப்படுகிறது. மிஷ்கின் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தை ராக்போர்ட் நிறுவனத்தின் சார்பில் முருகானந்தம் தயாரித்து இருந்தார்.

  மீண்டும் சினிமாவுக்குள் 'மெஹந்தி சர்க்கஸ்' ஹீரோ! தேசிய விருது வென்ற இயக்குநருடன் கூட்டணி!

  திகில் பின்னணியில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தனர்.அதற்கான வேலைகளும் தீவிரமாக நடைபெற்று வந்தது.

  இதனால் ஏற்கனவே அறிவித்தபடி ஆகஸ்ட் 31ஆம் தேதி படம் வெளியாகாத சூழல் ஏற்பட்டது. மேலும் வேறு தேதியை இறுதி செய்யும் முயற்சியில் தயாரிப்பு நிறுவனம் உள்ளது.

  Read More: தாய்லாந்தில் சீறும் அஜித்தின் பைக்.. மீண்டும் ட்ரிப்பை தொடங்கிய துணிவு ஹீரோ!

  பிசாசு 2 திரைப்படத்தில் இடம் பிடித்திருக்கும் இரண்டாவது பாடலை சிங்கிள் ட்ராக் முறையில் வெளியிட்டனர். ஏற்கனவே கார்த்திக் ராஜா இசையில் உருவான முதல் பாடலை வெளியிட்டிருந்தனர்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Director mysskin, Mysskin