Home /News /entertainment /

நயன்தாராவின் காட்பாதர் அப்டேட்டை வெளியிட்ட மோகன் ராஜா

நயன்தாராவின் காட்பாதர் அப்டேட்டை வெளியிட்ட மோகன் ராஜா

நயன்தாரா, மோகன் ராஜா

நயன்தாரா, மோகன் ராஜா

Nayanthara: காட்பாதர் படப்பிடிப்பு தளத்தில் நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை மோகன் ராஜா பகிர்ந்து, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சம்பந்தப்பட்ட முக்கியமான ஷெட்யூல்டை முடித்ததாக பதிவிட்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
தெலுங்கில் சிரஞ்சீவி, நயன்தாரா நடிப்பில் காட்பாதர் திரைப்படத்தை இயக்கி வருகிறார் மோகன் ராஜா. இந்தப் படம் குறித்த முக்கியமான தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த லூசிபர் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் தான் இந்த காட்பாதர். பிரித்திவிராஜ் இயக்கிய படத்தை தெலுங்கில் மோகன் ராஜா ரீமேக் செய்கிறார். மோகன்லால் மலையாளத்தில் நடித்த வேடத்தை தெலுங்கில் சிரஞ்சீவியும், அங்கு மஞ்சு வாரியார் நடித்த வேடத்தை தெலுங்கில் நயன்தாராவும் நடிக்கின்றனர். மஞ்சு வாரியாருக்கு கதைப்படி தனது முதல் கணவர் மூலம் டீன் ஏஜ் வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கும். மேலும், அவரது இரண்டாவது கணவராக வரும் விவேக் ஓபராய் தான் படத்தின் பிரதான வில்லன். இதுபோன்ற வேடத்தை நயன்தாரா செய்வாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அந்த வேடத்தில் தான் நயன்தாரா நடித்து வருகிறார்.



இந்நிலையில் காட்பாதர் படப்பிடிப்பு தளத்தில் நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை மோகன் ராஜா பகிர்ந்து, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சம்பந்தப்பட்ட முக்கியமான ஷெட்யூல்டை முடித்ததாக பதிவிட்டுள்ளார். மேலும், தனி ஒருவன், வேலைக்காரன், காட்பாதர் என தொடர்ச்சியாக தனது மூன்று படங்களில் நயன்தாரா நடித்திருப்பதை குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

Also read... கோட்டயம் பிரதீப் என்ற வெள்ளந்தி நகைச்சுவையாளன்

சிரஞ்சீவி நடித்திருக்கும் ஆச்சாரியா திரைப்படம் ஏப்ரல் இறுதியில் திரைக்கு வருகிறது. அதனைத் தொடர்ந்து காட்பாதர் திரைப்படத்தை வெளியிட உள்ளனர். விரைவில் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகத்தை மோகன்லாலை வைத்து பிரிதிவிராஜ் இயக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Nayanthara

அடுத்த செய்தி