மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி தமிழிலும் குறிப்பிடத் தகுந்த படங்களில் நடித்திருக்கிறார். பாலசந்தரின் 'அழகன்', மணிரத்னத்தின் இயக்கத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த 'தளபதி', 'ஆனந்தம்', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' போன்ற படங்களில் அவரது நடிப்பு ரசிகர்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.
அவரைப் போலவே அவரது மகனான துல்கர் சல்மானும் வாயை மூடி பேசவும், ஓகே கண்மனி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.
இதையும் படிக்க | பிரபல நடிகை தனது கசின் சிஸ்டர் என்பதை 40 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறிந்த வனிதா விஜயகுமார்!
இந்த நிலையில் 'அழகன்' படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடிகர் மம்மூட்டி பாடல் இசைக்கு ஏற்றார்போல கீபோர்டு இசைப்பது போல நடித்திருப்பார். பாடல் இசை இல்லாமல் உண்மையில் அவர் இசைப்பதற்கு சத்தம் எப்படி வந்திருக்கும் என்ற தனது கற்பனையை ரசிகர் ஒருவர் வீடியோவாகப் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ ரசிகர்கள் பலருக்கும் சிரிப்பை வரவழைத்திருக்கிறது.
Even if hard, have always come to terms when times and technology trolls the past good memories, but this is little too much to take 😂😂😂😂 https://t.co/LleYznBgl6
— Mohan Raja (@jayam_mohanraja) December 20, 2022
இதனைப் பகிர்ந்த இயக்குநர் மோகன் ராஜா, ''கடினமானதுதான் என்றாலும், காலகட்டமும் தொழில்நுட்பமும் அந்த கால நல்ல நினைவுகளை ட்ரோல் செய்யும்போது சிரிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால் இதனைப் பார்க்கும்போது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை'' என்று குறிப்பிட்டுள்ளார்.
மோகன் ராஜா சமீபத்தில் சிரஞ்சீவி, சல்மான் கான் நடிப்பில் காட் ஃபாதர் என்ற தெலுங்கு படத்தை இயக்கியிருந்தார். கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் நல்ல வசூலைப் பெற்றது. அடுத்ததாக தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.