மோகன்.ஜி இயக்கத்தில் செல்வராகவன், நட்டி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 17 ஆம் தேதி வெளியான பகாசூரன் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பதிவு செய்திருக்கும் இந்தப் படம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
படம் குறித்து நடிகர் கார்த்தி, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், யோகி பாபு, இயக்குநர் பேரரசு, எஸ்.ஜே.சூர்யா, யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் குமார், ஜீவா, நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டியும் வாழ்த்தியும் கமெண்ட் செய்துவருகிறார்கள். குறிப்பாக இயக்குநர் செல்வராகவனின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
நடிகர் கார்த்தி தனது பதிவில், இயக்குநர் செல்வராகவனை முழு நேர நடிகராக பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களைப் போல சிலருக்கு மட்டுமே அவர் மிகச்சிறந்த நடிகர் என்பது தெரியும். தற்போது உலகம் அவரது நடிப்புத் திறனை காண்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
மோகன் அண்ணா,
உங்களின் மனம் தளராத முயற்சி தான் வெற்றியை தேடி தரும்👏@mohandreamer #பகாசூரன் pic.twitter.com/tMgQg5uLPC
— 🔥KUMAR .G PMK 💙💛💔 (@AMR_ARMY1) February 22, 2023
இந்த நிலையில் இயக்குநர் மோகன்.ஜி தனது பகாசூரன் பட போஸ்டர் ஒட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது படம் மக்களிடையே கவனம் பெற இயக்குநர் மோகன்.ஜியின் செயல் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
முன்னதாக கடந்த சில வருடங்களுக்கு முன் இதே போல இயக்குநர் மிஷ்கின் தனது ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பட போஸ்டரை திருப்பூர் வீதிகளில் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Selvaraghavan