Home /News /entertainment /

நவம்பரில் வெளியாகிறது செல்வராகவனின் பகாசூரன் படம்?

நவம்பரில் வெளியாகிறது செல்வராகவனின் பகாசூரன் படம்?

செல்வராகவனின் பகாசூரன்

செல்வராகவனின் பகாசூரன்

திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன்.G தற்போது பகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். அதில் இயக்குனர் செல்வராகவன் நாயகனாக நடித்திருக்கிறார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
செல்வராகவன் நடித்துள்ள பகாசூரன் படத்தை நவம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன்.G தற்போது பகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். அதில் இயக்குனர் செல்வராகவன் நாயகனாக நடித்திருக்கிறார். அதேபோல் ஒளிப்பதிவாளர் நட்டி என்னும் நடராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

சமூகத்தில் நடக்கும் ஒரு முக்கிய நிகழ்வை மையமாகக் கொண்டு பகாசூரன் திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் பகாசூரன் படத்தை வெளியிடுவதற்கான வேலைகளும் தொடங்கியுள்ளன. அதற்கான தமிழக வெளியீடு உரிமையை சுப்பையா என்பவர் பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே மாநாடு திரைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

Also read... தமிழ் நாட்டின் தகுதியான பேச்சிலர் இவர்தான் - சிம்பு பட நடிகை ஓபன் டாக்!

மேலும் விரைவில் வெளியாகவிருக்கும் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனின் 'கோல்ட்' திரைப்படத்தையும் தமிழகத்தில் வெளியிட உள்ளார்.

இதனால் பகாசுரன் திரைப்படத்தை சுமார் 250 திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர். மேலும் நவம்பர் 4 அல்லது நவம்பர் 11 ஆகிய தேதிகளில் பகாசூரனை வெளியிட முயற்சிக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சான்ஸ் எஸ் எஸ் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Director selvaragavan, Entertainment

அடுத்த செய்தி