ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கூல்லிப்.. குட்கா.. 10 மடங்கு அபராதம் - முதல்வருக்கு கோரிக்கை விடுத்த பிரபல இயக்குநர்!

கூல்லிப்.. குட்கா.. 10 மடங்கு அபராதம் - முதல்வருக்கு கோரிக்கை விடுத்த பிரபல இயக்குநர்!

மோகன் ஜி

மோகன் ஜி

புகையிலை பயன்படுத்துவது தொடர்பாக இயக்குநர் மோகன் ஜி, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  விபத்துகளை தடுக்கும் வகையில், கடந்த 2019 ஆம் ஆண்டில் மத்திய அரசு புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தை கொண்டு வந்தது. இது நேற்று முதல் அமல்படுத்தப்படுத்தப்பட்டது.அதன்படி, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமன்றி, அவர்களுடன் பயணிக்கும் நண்பர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வாடகை கார், ஆட்டோக்களில் பயணிப்பவர்களுக்கு பொருந்தாது.

  ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அரசின் அவசர போக்குவரத்திற்கு வழி விடாத நபர்களிடமிருந்து பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். இதேபோல், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கான அபராதத் தொகை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிவேகமாக சென்றால் அபராத தொகை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே தவறை மீண்டும் செய்தால் 10,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

  ALSO READ | கோவை கார் வெடிப்பு: 6வது நபர் கைதில் பரபரப்பு திருப்பம்!

  வாகன பந்தயத்தில் ஈடுபட்டால் 1,500 ரூபாய் முதல் வசூலிக்கப்பட்ட அபராத தொகை இனி 15,000 முதல் 25,000 ரூபாயாக அதிகரிக்கப்படும். வாகனங்களில் சைலன்சர் மாடிஃபிகேஷன் செய்தால் ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். இப்படியாக பல மடங்கு அதிகரிக்கப்பட்ட அபராதத்தொகை நேற்று முதல் வசூலிக்கப்படுகிறது. ஒரு பக்கம் வாகன ஓட்டிகள் புலம்பினாலும், அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு குரல்களும் எழுந்துள்ளன. இந்நிலையில் அரசின் இந்த நடவடிக்கையை சுட்டிக்காட்டியுள்ள இயக்குநர் மோகன் ஜி, புகையிலைக்கு எதிராகவும் இப்படியான சட்டம் வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாகட்வீட் செய்துள்ள அவர்,

  வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகையை உயர்த்தியது போல பொது இடங்களில் புகைப் பிடிப்பவர்களுக்கு அபராத தொகையையும், சிறுவர்களுக்கு கூல்லிப் மற்றும் குட்கா விற்பனை செய்யும் கடைகாரர்களுக்கும் அபராதத்தை 10 மடங்கு உயர்த்தி அறிவிக்க முதல்வர் திரு முக ஸ்டாலின் சார் அவர்களை கேட்டு கொள்கிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்

  இயக்குநர் மோகன் ஜி, பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது பகாசூரன் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் ரிலீசாகவுள்ளது


  Published by:Murugadoss C
  First published:

  Tags: CM MK Stalin, Smoking