முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ''பா.ரஞ்சித் என் நண்பர்.. எந்த சமூகத்துக்கும் எதிராக நான் படம் எடுக்கவில்லை'' - ஓபனாக பேசிய மோகன்.ஜி.!

''பா.ரஞ்சித் என் நண்பர்.. எந்த சமூகத்துக்கும் எதிராக நான் படம் எடுக்கவில்லை'' - ஓபனாக பேசிய மோகன்.ஜி.!

மோகன் ஜி

மோகன் ஜி

இப்படத்தில் செல்வராகவன், நட்டி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் ராதாரவி, ராஜன்.கே, சரவண சுப்பையா, மன்சூர் அலிகான், தேவதர்ஷினி, பி.எல்.தேனப்பன். கூல் சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

'பழைய வண்ணாரப்பேட்டை', 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' படங்கள் மூலம் கவனம் பெற்றவர் மோகன்.ஜி. அடுத்ததாக 'ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன்' தயாரிப்பில் உருவாகும் 'பகாசூரன்' படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் செல்வராகவன், நட்டி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் ராதாரவி, ராஜன்.கே, சரவண சுப்பையா, மன்சூர் அலிகான், தேவதர்ஷினி, பி.எல்.தேனப்பன். கூல் சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் முன்னதாக வெளியாகி பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. வருகிற 17 ஆம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கல்லூரி விழா ஒன்றில் பேசிய இயக்குநர் மோகன்.ஜி,  பெண்கள் சமூக வலைதளங்களில் புரொஃபைல் பிக்சர்களைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது,  உங்களை அழகாக காட்டக் கூடிய புரொஃபைல் பிக்சர்களை வைக்காதீர்கள். அதுதான் பிரச்னையின் ஆரம்பப்புள்ளி. நீங்கள் டார்க்கெட் செய்யப்படுவது அந்த இடத்திலிருந்து தான் என்று பேசிய வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாக பலர் அதற்கு எதிர்ப்பும் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து சமீபத்தில் படம் குறித்து பேசிய மோகன் ஜி, பகாசூரன் எந்த சமூகத்துக்கும் எதிரான படமும் இல்லை எனவும் தொடர்ந்து  பா.ரஞ்சித் பட்டியலின மக்களுக்கும் நான் ஓபிசி தரப்பினருக்கும் படம் எடுப்பதாகச் சொல்கிறார்கள். அதில் உண்மையில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், இயக்குநர் பா.ரஞ்சித் என் பேஸ்புக் நண்பர். சினிமாவில் நான் யாரையும் எதிரியாக பார்க்கவில்லை. சில செய்திகளின் அடிப்படையில் கள ஆய்வு மேற்கொண்டு பகாசூரன் படத்தை உருவாக்கி இருக்கிறேன் என்றும் சமூகத்துக்குத் தேவையான படங்களைத் தொடர்ந்து எடுப்பேன் என்றும் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Entertainment