ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வைகைப்புயல் வடிவேலுவுடன் பணியாற்றும் தொடர் கனவு நிறைவேறியது - இயக்குநர் மாரி செல்வராஜ்!

வைகைப்புயல் வடிவேலுவுடன் பணியாற்றும் தொடர் கனவு நிறைவேறியது - இயக்குநர் மாரி செல்வராஜ்!

மாரி செல்வராஜ் - வடிவேலு

மாரி செல்வராஜ் - வடிவேலு

மாமன்னன் போஸ்டரில் முதலாவதாக வைகைப்புயல் வடிவேலுவின் பெயர் இடம்பெற்றிருந்தது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  வைகைப்புயல் வடிவேலுவுடன் பணிபுரிவது ஒரு தொடர் கனவு நிறைவேறியது போல் இருப்பதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

  ’பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகியப் படங்களை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ், துருவ் விக்ரமை வைத்து புதிய படமொன்றை இயக்க தயாரானார். இதற்கிடையே நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், தனக்கொரு படம் இயக்கக் கேட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாகின. இதற்கிடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியானார் உதயநிதி ஸ்டாலின்.

  தேர்தல் முடிந்து முடிவுகளும் வெளியான நிலையில், தற்போது படத்தின் வேலைகள் தொடங்கியிருக்கின்றன. இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். பகத் பாசில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் வைகைப்புயல் வடிவேலும் நடிக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

  சித்து-ஸ்ரேயா வீட்டில் விசேஷம்... குவியும் வாழ்த்துகள்!

  இதற்கிடையே படத்திற்கு மாமன்னன் எனப்பெயரிடப்பட்டுள்ளதாக, இன்று காலை படக்குழுவினர் அறிவித்தனர். அதோடு இதன் போஸ்டரும் வெளியானது. அதில் முதலாவதாக வைகைப்புயல் வடிவேலுவின் பெயர் இடம்பெற்றிருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் அவர் நடிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், இது ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

  வேறுபாடுகள் காரணமாக தனுஷ் படத்திலிருந்து விலகுகிறேன் - பாடலாசிரியர் விவேக்

  இந்நிலையில் வடிவேலுவுடனான படங்களுடன், 'ஒரு தொடர் கனவு நிறைவடைந்தது. மாமன்னனில் வைகைப்புயல்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Vadivelu, Mari selvaraj, Udhayanidhi Stalin