முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Mari Selvaraj: மாரி செல்வராஜின் அடுத்தப் படத்தில் நடிக்கும் சூர்யா?

Mari Selvaraj: மாரி செல்வராஜின் அடுத்தப் படத்தில் நடிக்கும் சூர்யா?

மாரி செல்வராஜ் - சூர்யா

மாரி செல்வராஜ் - சூர்யா

இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் சூர்யாவை வைத்து புதிய படமொன்றை இயக்கவிருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

  • Last Updated :

இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் சூர்யாவை வைத்து புதிய படமொன்றை இயக்கவிருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

அறிமுகப் படமான ‘பரியேறும் பெருமாள்’ படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ள கர்ணன் திரைப்படம் தற்போது திரைக்கு வந்துள்ளது. தனுஷ், லால், லட்சுமி பிரியா, ரஜிஷா விஜயன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் கர்ணன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, மீண்டும் மாரி செல்வராஜை புதிய படத்தில் ஒப்பந்தமிட்டிருக்கிறாராம். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடிக்கிறாராம். படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு, அதாவது 2022 மத்தியில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாரி செல்வராஜ் ஏற்கனவே தனது அடுத்த படத்தில் பிஸியாகி விட்டார். துருவ் விக்ரம் நடிக்கும் அந்தப் படம் விளையாட்டு வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தியதாக உருவாகவிருக்கிறது. இதனை இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கிறார். இதற்கிடையே 'நவரசா' படத்தை முடித்த சூர்யா, தற்போது பாண்டிராஜ் இயக்கும் 'சூர்யா 40' படப்பிடிப்பில் உள்ளார்.

இந்நிலையில் சூர்யா மற்றும் மாரி செல்வராஜ் இருவரும் படம் குறித்த ஆர்வம், இருவரின் ரசிகர்கள் மத்தியிலும் எகிறியிருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ வெளியாகும் எனத் தெரிகிறது.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Actor Suriya, Mari selvaraj