Home /News /entertainment /

மாமன்னன் படத்திற்கு பெரும் உழைப்பை கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும் அன்பும் ப்ரியமும் - மாரி செல்வராஜ்

மாமன்னன் படத்திற்கு பெரும் உழைப்பை கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும் அன்பும் ப்ரியமும் - மாரி செல்வராஜ்

மாமன்னன்

மாமன்னன்

மாமன்னன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இறுதி கட்டப் பணிகளை இயக்குனர் மாரி செல்வராஜ் விரைவில் தொடங்கவுள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மாமன்னன் படத்திற்கு பெரும் உழைப்பை கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும் அன்பும் ப்ரியமும் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு சேலம் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் படத்திற்கான பெரும்பாலான காட்சிகளை இயக்குனர் மாரி செல்வராஜ் படமாக்கினார்.

இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பும் சேலம் பகுதியில் நடைபெற்று வந்தது. அதில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் பங்கு பெரும் காட்சிகளை படமாக்கினர்.

அதற்கான படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதை பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

மாமன்னன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இறுதி கட்டப் பணிகளை இயக்குனர் மாரி செல்வராஜ் விரைவில் தொடங்கவுள்ளார்.

Also read... விஜய்க்கு வில்லனாக நடிக்க நடிகர் சஞ்சய் தத்திற்கு இத்தனை கோடிகள் சம்பளமா?

மேலும் இந்த திரைப்படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கின்றனர். மாமன்னன் திரைப்படன் தன்னுடைய திரைப் பயணத்தில் முக்கியமான படமாக இருக்கும் என உதயநிதி ஸ்டாலின் எதிர்பார்க்கிறார்.



இந்நிலையில் படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாமன்னன் படப்பிடிப்பு நிறைவுபெற்றது, பெரும் உழைப்பை கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும் அன்பும் ப்ரியமும் என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actress Keerthi Suresh, Mari selvaraj, Udhayanidhi Stalin

அடுத்த செய்தி