முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஆங்காரமாய் ஆடியது போதும் இளைப்பாறுங்கள் அப்பா - நெல்லை தங்கராஜுக்கு மாரி செல்வராஜ் இரங்கல்!

ஆங்காரமாய் ஆடியது போதும் இளைப்பாறுங்கள் அப்பா - நெல்லை தங்கராஜுக்கு மாரி செல்வராஜ் இரங்கல்!

நெல்லை தங்கராஜ், இயக்குநர் மாரி செல்வராஜ்

நெல்லை தங்கராஜ், இயக்குநர் மாரி செல்வராஜ்

கடந்த 2018-ஆம் ஆண்டு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நெல்லை தங்கராஜ்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

'பரியேறும் பெருமாள்' படத்தில் நடித்த தெருக்கூத்து கலைஞர் நெல்லை தங்கராஜ் மறைவுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நெல்லை தங்கராஜ். தெருக்கூத்து கலைஞரான நெல்லை தங்கராஜ் இப்படத்தில் பரியனாக நடித்த கதிரின் தந்தையாக நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார்.

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் பிரபலமடைந்திருந்தாலும், குடியிருக்க வீடு இல்லாமல் ஓலை குடிசையில் ஏழ்மையில் வசித்து வந்த நெல்லை தங்கராஜுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வீடு கட்டி கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நெல்லை தங்கராஜ் இன்று காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் உட்பட திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து தற்போது பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் நெல்லை தங்கராஜ் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ஆங்காரமாய் ஆடியது போதும் இளைப்பாறுங்கள் அப்பா, என் கடைசி படைப்பு வரையிலும் உங்கள் பாதச்சுவடிருக்கும்.. பரியேறும் பெருமாள், என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Also read... 'கவர்ச்சியாக தெரிய இதையெல்லாம் செய்ய சொன்னார்' - இயக்குநர் குறித்து சமீரா ரெட்டி புகார்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Mari selvaraj