ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மாரி செல்வராஜ் இயக்கும் ‘வாழை’ படத்தின் ஷூட்டிங் தொடக்கம்… உதயநிதி தொடங்கி வைத்தார்…

மாரி செல்வராஜ் இயக்கும் ‘வாழை’ படத்தின் ஷூட்டிங் தொடக்கம்… உதயநிதி தொடங்கி வைத்தார்…

உதயநிதி - மாரி செல்வராஜ்

உதயநிதி - மாரி செல்வராஜ்

தற்போது உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கும் மாமன்னன் என்ற படத்தை மாரி செல்வராஜ் இயக்கி முடித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இயக்குனர் மாரி செல்வராஜின் 4ஆவது படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியது. இந்த படத்திற்கு வாழை என்று பெயர் வைத்துள்ளனர். படப்பிடிப்பை நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி தொடங்கி வைத்தார்.

  சிறுவர்களை மையமாக வைத்து உருவாகவுள்ள இந்த படத்தை மாரி செல்வராஜ் தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல் உள்ளிட்டோர் இடம்பெறுகிறார்கள்.

  வாழை படத்தில் ஒளிப்பதிவு தேனி ஈஸ்வர், இசை சந்தோஷ் நாராயணனன், கலை குமார் கங்கப்பன், எடிட்டிங் சூர்ய பிரதமான், சண்டை பயிற்சி திலீப் சுப்பராயன், நடனம் சாண்டி, பாடல்கள் யுகபாரதி வெயில் முத்து ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றுகின்றனர்.

  நடிகர் அப்பாஸிற்கு அறுவை சிகிச்சை… விரைவில் வீடு திரும்புவேன் என ஃபேஸ்புக்கில் பதிவு…

  தமிழ் சினிமாவில் அழுத்தமான படைப்புகளுக்கு பெயர்போன இயக்குனராக மாரி செல்வராஜ் இருந்து வருகிறார். இவரது இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டானதுடன் தமிழகத்தில் சமூக ரீதியாக அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

  தற்போது உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கும் மாமன்னன் என்ற படத்தை மாரி செல்வராஜ் இயக்கி முடித்துள்ளார். ஏ.ஆர். ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.

  கேரளாவில் படவிழாவில் பங்கேற்க நடிகை ஷகீலாவுக்கு தடை… ரசிகர்கள் கடும் எதிர்ப்பு…

  இதற்கிடையே, விக்ரமின் மகன் துருவை வைத்து ஒரு படத்தை மாரி செல்வராஜ் இயக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்தன. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இந்நிலையில் தனது அடுத்த படத்தை மாரி செல்வராஜ் தொடங்கியிருக்கிறார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Kollywood