முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ‘பொன்னியின் செல்வன் எம்.ஜி.ஆர். நடிக்க வேண்டிய படம்’ – டீசர் வெளியீட்டு விழாவில் மணிரத்னம் பேச்சு

‘பொன்னியின் செல்வன் எம்.ஜி.ஆர். நடிக்க வேண்டிய படம்’ – டீசர் வெளியீட்டு விழாவில் மணிரத்னம் பேச்சு

பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் பேசும் இயக்குனர் மணிரத்னம்.

பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் பேசும் இயக்குனர் மணிரத்னம்.

Mani Ratnam PS 1 : கலைஞர்கள், நடிகர்கள், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், தோட்டா தரணி, ஸ்ரீகர் பிரசாத், ஏ.ஆர். ரகுமான் உள்பட அனைவரின் உதவி இல்லாமல் என்னால் இந்த படத்தை உருவாக்கியிருக்க முடியாது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

‘பொன்னியின் செல்வன் எம்.ஜி.ஆர். நடிக்க வேண்டிய படம், கொரோனா காலத்தில் மிக கடினமாக உழைத்து படத்தை உருவாக்கியுள்ளோம்’ – என்று இயக்குனர் மணி ரத்னம் பேசியுள்ளார்.

பொன்னியின் செல்வன்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று இயக்குனர் மணிரத்னம் பேசியதாவது-

என்னோட முதல் நன்றி கல்கிக்கு. நான் கல்லூரிக்கு சென்றபோது இந்த புத்தகத்தை படித்தேன். சுமார்40 ஆண்டுகளாக இந்த புத்தகம் என் மனதில் இருக்கிறது.

பொன்னியின் செல்வன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்திருக்க வேண்டிய படம். நாடோடி மன்னன் படத்திற்கு பின்னர் அவர் பொன்னியின் செல்வன் படத்தை பண்ணவேண்டி இருந்தது. ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக படம் நின்று விட்டது.

நாக சைத்தன்யாவின் உருக்கமான பதிவு - இன்னும் சமந்தாவை மிஸ் செய்கிறாரோ என ரசிகர்கள் கேள்வி 

இன்றுதான் எனக்கு புரிந்தது எதற்காக எம்ஜிஆர் படம் நின்று விட்டது என்று. அவர் எங்களுக்காக இந்த படத்தை விட்டுவைத்து சென்றுள்ளார். இந்த படத்தை உருவாக்க பலர் முயற்சித்துள்ளனர். நானே 3 முறை முயற்சி செய்தேன்.

இந்த படத்தை உருவாக்குவது என்பது மிகப்பெரும் பொறுப்பு என்பதை நான் உணர்ந்துள்ளேன். கலைஞர்கள், நடிகர்கள், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், தோட்டா தரணி, ஸ்ரீகர் பிரசாத், ஏ.ஆர். ரகுமான் உள்பட அனைவரின் உதவி இல்லாமல் என்னால் இந்த படத்தை உருவாக்கியிருக்க முடியாது.

‘பொன்னியின் செல்வன்படத்திற்கு பின்னர் தமிழர் வரலாற்றை உலகம் அறியும்’ – ஜெயமோகன்

குறிப்பாக கொரோனா பிரச்னையில் இந்த படத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

First published:

Tags: Ponniyin selvan