முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியானது பொன்னியின் செல்வன் டீசர்… வியப்பில் ரசிகர்கள்

தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியானது பொன்னியின் செல்வன் டீசர்… வியப்பில் ரசிகர்கள்

பொன்னியின் செல்வன் டீசர் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

பொன்னியின் செல்வன் டீசர் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

Ponniyin Selvan Teaser : தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் பொன்னியின் செல்வன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் ரசிகர்களை வியப்பிற்குள்ளாக்கி வருகிறது.

விக்ரம், ஐஷ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்று புதினத்தை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன் படம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நாவல் பிரமாண்ட காட்சிகளை மனதில் நிறுத்தும் என்பதாலும், படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர்களாலும் பொன்னியின் செல்வன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்பட்டது.

கடந்த 5 நாட்களாக படத்தில் இடம்பெற்றுள்ள விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய் ஆகியோரின் கேரக்டர்களை படக்குழுவினர் வெளியிட்டனர். இவை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தமிழ் உள்பட 5 மொழிகளில் பொன்னியின் செல்வன் பட டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

டீசரைப் பார்க்க...

' isDesktop="true" id="769091" youtubeid="LYMhbm2ORoc" category="cinema">

தமிழில் இதனை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் 2 பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க - விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை - மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிக்கை

முதல் பாகம் செப்டம்பர் 30-ம்தேதி வெளியிடப்படவுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீசுடன் இணைந்து லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

First published:

Tags: Ponniyin selvan