நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன் மறைவு வருத்தம் அளிக்கிறது என இயக்குநர் மணிரத்னம் கூறியுள்ளார்.
இயக்குநரும், நடிகருமான பிரதாப் போத்தன் இன்று காலை மரணம் அடைந்தார். அவரின் உடல் கீழ்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்திய சினிமாவில் முன்னணி இயக்குநரான மணிரத்னம் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு பேட்டி அளித்த இயக்குனர் மணிரத்னம், பிரதாப் போதனை தனக்கு முதல் படத்திலிருந்து தெரியும் என்று தெரிவித்தார்.
மேலும் தனக்கு மிகச்சிறந்த நண்பர் பிரதாப் போத்தன், சினிமாவின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்றும், அவரின் மறைவு வருத்தத்தை அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.
Also read... பிரதாப் போத்தன் மறைவுக்கு திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி
தொடர்ந்து பேசிய மணிரத்னம், பிரதாப் போத்தனை மிஸ் செய்கிறேன் என வருத்தத்துடன் தெரிவித்தார். மணிரத்னமுடன் ஒளிப்பதிவாளர்கள் பி.சி.ஸ்ரீராம், ராஜீவ் மேனன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Entertainment, Mani rathnam