Home /News /entertainment /

பொன்னியின் செல்வன் 2-ஆம் பாகம் எப்போது வெளியாகும்? அப்டேட் கொடுத்த மணி ரத்னம்

பொன்னியின் செல்வன் 2-ஆம் பாகம் எப்போது வெளியாகும்? அப்டேட் கொடுத்த மணி ரத்னம்

இயக்குனர் மணி ரத்னம்

இயக்குனர் மணி ரத்னம்

தமிழ் சினிமாவின் மிகப்பெரும் மல்டி ஸ்டார் படமாக பொன்னியின் செல்வன் உருவாக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பொன்னியின் செல்வன் படத்தின்முதல் பாகம் இம்மாதம் 30-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அடுத்த பாகத்தின்வெளியீடு குறித்த அப்டேட்டை இயக்குனர் மணி ரத்னம் வெளியிட்டுள்ளார்.

    கல்கி எழுதிய வரலாற்றுபுதினமான பொன்னியின் செல்வன் மணிரத்னம் இயக்கத்தில் 2 பாகங்களாக படமாக்கப்பட்டுள்ளது. இந்த நாவல் மிகப்பெரும் புகழைப் பெற்றது என்பதால், மணிரத்னம் இயக்கியுள்ள படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் நாவல் ரசிகர்களும், சினிமா ரசிகர்களும் உள்ளனர்.

    கொரோனா காலத்திலும் கூட பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் படக்குழுவினர் 120 நாட்களாக படப்பிடிப்பை நடத்தி முடித்தனர். தமிழ் சினிமாவின் மிகப்பெரும் மல்டி ஸ்டார் படமாக பொன்னியின் செல்வன் உருவாக்கப்பட்டுள்ளது.

    3 படங்கள் தொடர் தோல்வி… அதிர்ச்சியில் சூர்யா பட நடிகை

    முதல்பாகம் இம்மாதம் 30-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்திற்கான வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களின் வர்த்தகம் நிறைவு பெற்ற நிலையில், தமிழ் நாடு ரிலீஸ் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.

    இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்த பாகம் இன்னும் 9 மாதத்திற்குள் வெளியாகும் என இயக்குனர்மணி ரத்னம் கூறியுள்ளார்.



    பாகுபலி படத்தைப் போலவே பொன்னியின் செல்வன் படத்திலும், முதல் பாகத்தில் பெரிய ட்விஸ்ட் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, நாசர், கிஷோர், ரஹ்மான், ஜெயராம், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி ,சோபிதா துலிபாலா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

    நடிகை மும்தாஜ் இப்ப என்ன செய்றாங்க தெரியுமா?

    இசை ஏ.ஆர்.ரகுமான். ஒளிப்பதிவு ரவிவர்மன். எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத். இந்த படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது படத்திற்கான புரொமோஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
    Published by:Musthak
    First published:

    Tags: Ponniyin selvan

    அடுத்த செய்தி