ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சர்ச்சையில் சிக்கிய சசிகுமாரின் அயோத்தி படம்

சர்ச்சையில் சிக்கிய சசிகுமாரின் அயோத்தி படம்

அயோத்தி

அயோத்தி

அயோத்தியை மந்திர மூர்த்தி என்பவர் இயக்க, ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கிறார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

முன்பு படத்திற்குள்தான் சர்ச்சைக்குரிய விஷயங்களை வைத்தார்கள். இப்போது படத்தின் தலைப்பிலேயே சர்ச்சைக்கு லீட் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இரண்டு நாள் முன்பு சசிகுமார் நடிப்பில் தொடங்கப்பட்ட படத்தின் போஸ்டரை கொஞ்சம் கலவரமாகவே இருந்தது. காரணம் படத்தின் பெயரான அயோத்தி. பாபர் மசூதி, ராமர் கோவில் என்று அயோத்தி என்றாலே நமக்கு நினைவு வருவது டிசம்பர் 6 கலவரங்கள்தான். அந்தப் பெயரில் ஒரு படம் என்றால் என்ன ஏது என யோசிப்பது சகஜம்தான்.

ஆனால், இந்தப் படத்துக்கு பிரச்சனை வந்திருப்பது வேறொரு திசையிலிருந்து. அயோத்தியை மந்திர மூர்த்தி என்பவர் இயக்க, ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் கதை என்னுடையது, அதை திருடிவிட்டார்கள். நான் வழக்குத் தொடுக்கப் போகிறேன் என கோடம்பாக்கத்தில் ஒரு இயக்குனர் கிளம்பியிருக்கிறார். இவர் வாரணாசி என்ற பெயரில் எழுதிய கதையைதான் அயோத்தி என்ற பெயரில் எடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

Also read... விக்ரமின் கோப்ரா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது...!

அயோத்தி படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது. இந்த குற்றச்சாட்டை அவர்கள் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. ஒன்றை மட்டும் படக்குழு உறுதி செய்துள்ளது. அதாவது நாம் நினைப்பது போல் அயோத்தி படத்தில் எந்தவொரு சர்ச்சைக்குரிய அம்சமும் இல்லையாம்.

First published:

Tags: Actor Sasikumar, Director sasikumar