விஜய் சேதுபதி - அமலாபால் உடன் இணைந்த பிரபல இயக்குநர்!

மீகாமன், தடையற தாக்க, தடம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ்திருமேனி, இமைக்கா நொடிகள் படத்தில் அனுராக் காஷ்யப்புக்குப் பின்னணி குரல் கொடுத்திருந்தார்.

விஜய் சேதுபதி - அமலாபால் உடன் இணைந்த பிரபல இயக்குநர்!
அமலாபால் | விஜய்சேதுபதி
  • News18
  • Last Updated: June 19, 2019, 4:22 PM IST
  • Share this:
விஜய் சேதுபதி - அமலாபால் நடிக்கும் புதிய படத்தில் பிரபல இயக்குநர் ஒருவர் நடிகராக அறிமுகமாகிறார்.

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் ஒன்றை அறிமுக இயக்குநர் வெங்கடகிருஷ்ணா ரோகாந்த் இயக்குகிறார். எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ரோகாந்த், இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் மூலம் விஜய்சேதுபதிக்கு முதல்முறையாக ஜோடியாகிறார் அமலாபால். மேலும் அமலாபாலுடன் இணைந்து  ஒரு வெளிநாட்டு பெண்ணும் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் புதிய அறிவிப்பை இயக்குநர் கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார். அதன்படி இயக்குநர் மகிழ் திருமேனி இந்தப் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.

மீகாமன், தடையற தாக்க, தடம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ்திருமேனி, இமைக்கா நொடிகள் படத்தில் அனுராக் காஷ்யப்புக்குப் பின்னணி குரல் கொடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது நடிகராகவும் அறிமுகமாகிறார்.கிறிஸ்துமஸ், புத்தாண்டு வருடம், காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்த கதையில் சர்வதேசஅளவிலான பிரச்னையும் மையமாக பேசப்பட இருக்கிறது. படத்தில் விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடிக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்கிறார்.

வீடியோ பார்க்க: எதிரும் புதிருமாய் வசனங்களால் சீண்டிய தல VS தளபதி!

First published: June 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading