கொரோனா நெகட்டிவ்: வாக்களித்த லோகேஷ் கனகராஜ்!

கொரோனா நெகட்டிவ்: வாக்களித்த லோகேஷ் கனகராஜ்!

லோகேஷ் கனகராஜ்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அதிலிருந்து மீண்டு வந்து, இன்று வாக்களித்திருக்கிறார்.

  • Share this:
கொரோனாவால் பாதிக்கப்பட்ட, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அதிலிருந்து மீண்டு வந்து, இன்று வாக்களித்திருக்கிறார்.

'கைதி' மற்றும் 'மாஸ்டர்' ஆகியப் படங்களை இயக்கி புகழ் பெற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கடந்த மாத இறுதியில் கொடிய நோயானா கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அதிலிருந்து முழுமையாக குணமடைந்ததையடுத்து, இந்த இளம் மற்றும் திறமையான இயக்குநர் இன்று தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளார்.

கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் 'விக்ரம்' படத்தின் முன் தயாரிப்பில் தற்போது பணியாற்றி வரும் லோகேஷ் கனகராஜ், தற்போது கோவிட் மீண்டு வந்துள்ளதாகவும், சமீபத்திய பரிசோதனையில் எதிர்மறையை சோதித்ததாகவும் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.இன்று வாக்களித்த பின்னர் விரலில் மையுடன் செல்ஃபியை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ், "கோவிட்டிலிருந்து மீண்டு விட்டேன். எதிர்மறையாக சோதிக்கப்பட்டிருக்கிறேன்! உங்கள் அனைவரின் வாழ்த்துகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி. தயவுசெய்து வாக்களிக்கவும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், 'விக்ரம்' திரைப்படம் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய ஆக்ஷன் த்ரில்லர் என்று கூறப்படுகிறது. கமல்ஹாசன் நடிக்கும் இந்தப் படத்தின் பணிகள், முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு இந்தப் படத்தின் படப்பிடிப்பை கமல் தொடங்குவார் என்று கூறப்படுகிறது. படத்திற்கு இசை அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: