அடுத்த படம் பற்றி அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்
‘மாஸ்டர்’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்க இருக்கும் அடுத்த படம் குறித்து வாய் திறந்துள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
- News18 Tamil
- Last Updated: September 15, 2020, 7:07 PM IST
மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றிப்படங்களைக் கொடுத்து மக்களிடம் கவனம் பெற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது 3-வது படத்திலேயே விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ படத்தை இயக்கியுள்ளார்.
ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போயுள்ளது. கொரோனா பிரச்னை முடிந்து இயல்புநிலை திரும்பிய பின்னர் ‘மாஸ்டர்’ திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தை அடுத்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க இருப்பதாகவும், ரஜினிகாந்த் நடிக்கும் கடைசிப் படமாக இது இருக்கும் என்றும் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இதற்கு முன்பாகவே கமல்ஹாசனின் படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருப்பதாக பேசப்பட்டது. அதேவேளையில் ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகத்தை லோகேஷ் கனகராஜ் கையிலெடுத்திருப்பதாகவும் பேச்சு அடிபட்டது. இந்நிலையில் தான் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.
இதற்கு விஜய் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்திருந்தாலும் ‘மாஸ்டர்’ படத்தின் அப்டேட் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போயுள்ளது. கொரோனா பிரச்னை முடிந்து இயல்புநிலை திரும்பிய பின்னர் ‘மாஸ்டர்’ திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தை அடுத்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க இருப்பதாகவும், ரஜினிகாந்த் நடிக்கும் கடைசிப் படமாக இது இருக்கும் என்றும் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இதற்கு முன்பாகவே கமல்ஹாசனின் படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருப்பதாக பேசப்பட்டது. அதேவேளையில் ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகத்தை லோகேஷ் கனகராஜ் கையிலெடுத்திருப்பதாகவும் பேச்சு அடிபட்டது.
I'm very happy to let you guys know that the Announcement of my next directorial venture will be out tomorrow at 6pm!
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 15, 2020
இதற்கு விஜய் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்திருந்தாலும் ‘மாஸ்டர்’ படத்தின் அப்டேட் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.