ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பொன்னியின் செல்வன் ஜெயம் ரவிக்கு கதை சொன்ன முன்னணி இயக்குநர்!

பொன்னியின் செல்வன் ஜெயம் ரவிக்கு கதை சொன்ன முன்னணி இயக்குநர்!

ஜெயம் ரவி

ஜெயம் ரவி

கௌதம் மேனன் மற்றும் மன்சூர் அலிகான் ஆகிய இருவரும், தாங்கள் தளபதி 67 படத்தில் இருப்பதை ஏற்கனவே உறுதிப்படுத்தினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனக்கு ஒரு கதை சொல்லியிருப்பதாக நடிகர் ஜெயம் ரவி சமீபத்திய நேர்க்காணலில் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்த வெற்றிப்படங்களின் மூலம் முன்னணி இயக்குநராக மாறியுள்ளார். தற்போது விஜய்யுடன் தனது அடுத்த படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளார். விஜய், கார்த்தி, சூர்யா, கமல்ஹாசன் என முன்னணி நடிகர்களை இயக்கிய அவர், சமீபத்தில் ஜெயம் ரவியிடம் ஒரு கதையை சொல்லியிருக்கிறார். இதனை சமீபத்திய பேட்டியில் தெரிவித்த ரவி, அந்த ஆக்‌ஷன் கதையால் மிகவும் ஈர்க்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

ஆனால் ஜெயம் ரவியை வைத்து லோகேஷ் கனகராஜ் அந்தப் படத்தை இயக்குவாரா அல்லது அதை வேறு ஒருவர் இயக்க அவர் தயாரிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடிக்கும் ஒரு படத்தில் லோகேஷ் கனகராஜ் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதை 'விக்ரம்' படத்தின் இணை இயக்குனர் ரத்ன குமார் இயக்குவது என்பது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்கி வரும் 'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகும் இதில், விஜய் 50 வயது கேங்ஸ்டராக நடிக்கிறார். அதோடு இதில் திரையுலகைச் சேர்ந்த முக்கிய நடிகர்களும் இடம்பெற்றிருக்கிறார்கள்.

வாரிசு படக்குழுவுக்கு பெரும் சோகம்.. மாரடைப்பால் உயிரிழந்த புரொடக்‌ஷன் டிசைனர்

த்ரிஷா கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படும் நிலையில், கௌதம் மேனன் மற்றும் மன்சூர் அலிகான் ஆகிய இருவரும், தாங்கள் தளபதி 67 படத்தில் இருப்பதை ஏற்கனவே உறுதிப்படுத்தினர். விஜய் நடித்து முடித்துள்ள வாரிசு இன்னும் சில தினங்களில் வெளியாகும் நிலையில், அதன் பிறகு தளபதி 67 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Jayam Ravi, Lokesh Kanagaraj