ஐதராபாத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் சந்தித்து பேசியிருப்பது தெலுங்கு பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தெலுங்கில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் மகேஷ் பாபு. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சர்காரு வாரி பாட்டா திரைப்படம் மெகா ஹிட்டானது.
இந்நிலையில் தனது அடுத்த படத்தை முன்னணி இயக்குனர் திரி விக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபு பண்ணப் போகிறார். இந்தப் படத்தில் பீஸ்ட்டில் விஜய்க்கு ஜோடியாக நடித்த பூஜா ஹெக்டே மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக இடம்பெற்றுள்ளார்.
இதையும் படிங்க - துபாயில் படக்குழுவினருடன் ஓய்வெடுக்கும் பீஸ்ட் இயக்குனர் நெல்சன்… வைரலாகும் புகைப்படம்
திரி விக்ரம் படத்தை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கப் போகிறார். ஆப்பிரிக்க காடு, தங்கப் புதையல் உள்ளிட்டவை தொடர்பாக பரபரப்பான திரில்லராக இந்தப் படம் உருவாக உள்ளது. இதற்கான கதை உருவாக்கம் மற்றும் ப்ரீ புரொடக்சன் பணிகளில் ராஜமவுலி ஈடுபட்டுள்ளார்.
இதையும் படிங்க - ஓடிடியில் 200-வது நாள்… புதிய போஸ்டரை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஜெய்பீம் படக்குழு
இவை ஒருபுறம் இருக்க ஐதராபாத்தில் விக்ரம் பட புரொமோஷனின்போது மகேஷ் பாபுவை லோகேஷ் கனகராஜ் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, கதை ஒன்றை லோகேஷ் கூறியதாகவும், இதுபற்றி மகேஷ் பாபு தரப்பிலிருந்து பாசிடிவான பதில் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க - 20 ஆண்டுகளுக்கு பின்னர் அஜித் படத்தில் இடம்பெறும் மகாநதி சங்கர்
லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார். வருங்காலத்தில் மகேஷ் பாபுவுக்கு லோகேஷ் கனகராஜ் படம் பண்ணுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெலுங்கு திரையுலகில் பேசப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.