ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வேற லெவல் ப்ளானில் லோகேஷ்.. விக்ரம் படம் போல மாஸ் ப்ரோமா.. தயாராகும் விஜய்!

வேற லெவல் ப்ளானில் லோகேஷ்.. விக்ரம் படம் போல மாஸ் ப்ரோமா.. தயாராகும் விஜய்!

விக்ரம் படம்

விக்ரம் படம்

Lokesh kanagaraj vijay | விஜய்யின் 67வது திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வரும் திங்கட் கிழமை தொடக்கம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் விஜய்யின் 67வது பட அறிவிப்பை டீசராக வெளியிட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமா வரலாற்றில் கொடிகட்டி பறக்கும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்யின் 67வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், நடிகர் கமல்ஹாசன் நடிப்பிலும் வெளியான விக்ரம் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றிபெற்றது. இந்த படத்தின் அறிவிப்பு வெளியான போது ஆரம்பிக்கலாங்களா என்ற வார்த்தையோடு ஒரு டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

ALSO READ | வாரிசு படக் குழு சந்தித்த 7 பிரச்னைகள்

பொதுவாக பட அறிவிப்பை டைட்டிலாகவும், புகைப்படமாகவும் அறிவித்து கொண்டிருக்கும் நிலையில், படம் குறித்த அறிவிப்பை டைட்டில் டீசராக வெளியிட்டு கொண்டிருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

அந்த வகையில், விஜய்யின் 67வது பட அறிவிப்பையும் டைட்டில் டீசராக வெளியிடலாம் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் வாரிசு படத்தையும் தாண்டி லோகேஷ் கனகராஜின் அறிவிப்பை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இதற்கான படப்பிடிப்பு வருகிற திங்கள்கிழமை சென்னையில் நடைபெறுகிறது.

First published:

Tags: Actor Vijay, Lokesh Kanagaraj, Movie