முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தளபதி 67 படத்தின் டைட்டில்.. சோஷியல் மீடியாவை தெறிக்கவிடும் லோகேஷ் - விஜய் ரசிகர்கள்!

தளபதி 67 படத்தின் டைட்டில்.. சோஷியல் மீடியாவை தெறிக்கவிடும் லோகேஷ் - விஜய் ரசிகர்கள்!

தளபதி 67

தளபதி 67

தளபதி 67 படத்தின் டைட்டில் புரொமோ வீடியோவுடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தளபதி 67 படத்தின் பெயர் இன்று மாலை வெளியாக உள்ள நிலையில் என்ன பெயர் என்று சமூக வலைதளத்தை தெரிக்கவிடும் ரசிகர்கள். வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். தளபதி 67 என்ற தற்காலிக பெயருடன் அந்த படப்பிடிப்பு நடைபெறுகிறது.

இந்தப் படத்திற்காக History of Violence படத்தின் உரிமையை முறையாக கைபற்றி அதில் சில மாற்றங்களை செய்து திரைக்கதை எழுத்தியுள்ளார் லோகேஷ் கனகராஜ். மேலும் தன்னுடைய முந்தைய படங்களின் தொடர்பான Lokesh Cinematic Universe கனெக்சனையும் தொடர்பு படுத்தியுள்ளார்.

தளபதி 67 படத்தின் ஷூட்டிங், கடந்த மாதம் தொடங்கியது. அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் தனி விமானம் மூலம் காஷ்மீர் சென்றுள்ளனர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா இடம்பெற்றுள்ளார். விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்தில் அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், கவுதம் மேனன் உள்ளிட்டோர் படத்தில் நடிக்கின்றனர். கத்தி, பீஸ்ட் படங்களை தொடர்ந்து அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பீஸ்ட் படத்தில் ஒளிப்பதிவு மேற்கொண்ட மனோஜ் பரமஹம்சா தளபதி 67 படத்தில் இணைந்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பாக எஸ்.எஸ்.லலித்குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் டைட்டில் இன்று மாலை வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது. மேலும், படத்தின் டைட்டில் புரொமோ வீடியோவுடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளத்தில் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

Also read... ‘பையா 2’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் ஜான்வி கபூர்? விவரம் சொன்ன போனிகபூர்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vijay, Lokesh Kanagaraj