ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கமலால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டேனா? மெளனம் கலைத்த இயக்குனர் லிங்குசாமி!

கமலால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டேனா? மெளனம் கலைத்த இயக்குனர் லிங்குசாமி!

கமல் - லிங்குசாமி

கமல் - லிங்குசாமி

. உத்தம வில்லன் தோல்வியால் இயக்குனர் லிங்குசாமி கடனில் சிக்கி தவித்ததாகவும் சொல்லப்பட்டது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இயக்குனர் லிங்குசாமி திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் நடிகர் கமல் நடித்த உத்தம வில்லன் படத்தின் தோல்வி குறித்து மெளனம் கலைத்துள்ளார்.

  2015 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான படம் உத்தம வில்லன். படத்தின் கதை, திரைக்கதையை கமலும் கிரேசி மோகனும் இணைந்து எழுத ரமேஷ் அரவிந்த் இயக்கினார். பெரும் எதிர்பார்ப்புடன் இந்த படம் வெளியானது. இதில் கமலுடன் சேர்ந்து

  பூஜா குமார், ஊர்வசி, கே பாலச்சந்தர், நாசர், ஆண்ட்ரியா, ஜெயராம், பார்வதி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தனர். ஆனந்தம், ரன், சண்டக்கோழி என வரிசையாக வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் உத்தம வில்லன் படத்தை தயாரித்து இருந்தனர். வழக்கம் போல் கமலின் நடிப்பு பாராட்டப்பட்டாலும் விமர்சனம் ரீதியாக படம் தோல்வியை சந்தித்தது.

  40 வயதில் ஆண் குழந்தைக்கு தாயான விஜய் டிவி சீரியல் நடிகை!

  அதன் பின்பு தான் இயக்குனர் லிங்குசாமி பல கடன்களை சந்தித்ததாக கூறப்படுகிறது. உத்தம வில்லன் தோல்வியால் இயக்குனர் லிங்குசாமி கடனில் சிக்கி தவித்ததாகவும் சொல்லப்பட்டது. பிளாக் பஸ்டர் இயக்குனரின் நிலை மாறி போனதே கமலால் தான் என இணையதளத்தில் பல வீடியோக்கள் அண்மையில் வெளியாகின. இது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் அண்மையில் இயக்குனர் லிங்குசாமி அளித்த பேட்டி ஒன்றில் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

  அந்த பேட்டியில்  இயக்குனர் லிங்குசாமி உத்தம வில்லன் படத்தின் தோல்வி குறித்தும் கமலுக்காக அவர் தயார் செய்து வைத்திருக்கும் கதை பற்றியும் பேசியுள்ளார்.

  அவர் பேசியிருப்பதாவது, “ எங்க நிறுவனம் இப்படி ஆனதுக்கு கமல் எனும் மகா கலைஞன் மீது பழி போடாதீர்கள் அவர் கூட படம் பண்ணதே எங்களுக்கு பெரிய விஷயம். என் நிலை மாற உத்தம வில்லன் காரணம்னு நான் சொல்லவே மாட்டேன் அப்படி ஒரு வார்த்தை என்னோட வாயில இருந்து வராது, திரும்ப ஒரு படம் பண்ணுவோம்னு சார் சொல்லியிருக்காரு. அந்த மேஜிக் கண்டிப்பாக நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

  ஆனந்தம் படத்தை இயக்கிய போதே ’மதி’ என்று கமல் சாருக்காக ஒரு கதையை தயார் செய்தேன். அப்போது அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.இப்போது மீண்டும் அந்த கதையை ரீவொர்க் செய்கிறேன். கண்டிப்பாக கமல் சாருக்கு பிடிக்கும்” என தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Director lingusamy, Kamalhaasan, Kollywood, Tamil Cinema