முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கார்த்தியின் ஹிட் படத்தோட 2-ம் பாகத்தில் கமிட்டான ஆர்யா

கார்த்தியின் ஹிட் படத்தோட 2-ம் பாகத்தில் கமிட்டான ஆர்யா

ஆர்யா

ஆர்யா

நடிகர் ஆர்யா லிங்குசாமி இயக்கிய வேட்டை திரைப்படத்தில் மாதவனுடன் இணைந்து நடித்திருந்தார். 2012-ம் ஆண்டு வெளியான அந்த திரைப்படம்,  எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி அடையவில்லை. இருந்தாலும் ஒரு தரப்பு ரசிகர்களை அந்தப் படம் திருப்திப்படுத்தியது. 

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ஆர்யா பையா 2 திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான படம் பையா. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதில் கார்த்தி, தமன்னா, ஜெகன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அதில் இடம்பெற்றிருந்த பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. குறிப்பாக யுவன் சங்கர் ராஜா இசையில் நா.முத்துக்குமார் எழுத்தில் உருவான ’சொட்ட சொட்ட மழையாய் வந்தாய்...’ என்ற பாடல் இளைஞர்களால் கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு அந்த படத்தின் இரண்டாவது பாகத்தை லிங்குசாமி இயக்குகிறார். அதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த திரைப்படத்தில் ஆர்யா நாயகனாக நடிக்க உள்ளார்.  இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

நடிகர் ஆர்யா லிங்குசாமி இயக்கிய வேட்டை திரைப்படத்தில் மாதவனுடன் இணைந்து நடித்திருந்தார். 2012-ம் ஆண்டு வெளியான அந்த திரைப்படம்,  எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி அடையவில்லை. இருந்தாலும் ஒரு தரப்பு ரசிகர்களை அந்தப் படம் திருப்திப்படுத்தியது.

வேட்டை திரைப்படம் வெளியாகி 10 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், தற்போது லிங்குசாமியுடன் ஆர்யா மீண்டும் கை கோர்த்துள்ளார். இந்த திரைப்படம் ஆர்யா லிங்குசாமி கூட்டணிக்கு வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also read... எனக்கு பிடித்த நபர்களுடன் நடிப்பதில் மகிழ்ச்சி - விஜய் 67 குறித்து மகிழ்ச்சி தெரிவித்த த்ரிஷா!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Arya