மாணவர்களைக் கத்தியெடுக்கத் தூண்டுவது சினிமாதான்! இயக்குநர் லெனின் பாரதி காட்டம்

இளைஞர்கள், கதாநாயகர்களை மானசீகமாக ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர்கள்(நடிகர்கள்), கத்தியை எடுக்கும்போது அதையே மாணவர்களும் உள்வாங்குகின்றனர்.

news18
Updated: July 28, 2019, 7:43 PM IST
மாணவர்களைக் கத்தியெடுக்கத் தூண்டுவது சினிமாதான்! இயக்குநர் லெனின் பாரதி காட்டம்
லெனின் பாரதி
news18
Updated: July 28, 2019, 7:43 PM IST
எளிய மக்கள் தவறு செய்யும்போதுதான் கழிவறை வழுக்குகிறது. வசதி படைத்தவர்கள் தவறு செய்யும்போது நன்றாக இருக்கிறது என்று இயக்குநர் லெனின் பாரதி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் சிறந்த திரைப்படங்களுக்கான விருது விழா வழங்கும் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பரியேறும் பெருமாள், மேற்கு தொடர்ச்சி மலை, காலா உள்ளிட்ட படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் லெனின் பாரதி, ‘மாணவர்கள் கத்தியோடு அலைவதற்கு சினிமாதான் காரணம். இளைஞர்களுக்கு வன்முறையை, கத்தி எடுக்கும் கலாச்சாரத்தை சினிமாதான் தூண்டிவிடுகிறது. இளைஞர்கள், கதாநாயகர்களை மானசீகமாக ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர்கள்(நடிகர்கள்), கத்தியை எடுக்கும்போது அதையே மாணவர்களும் உள்வாங்குகின்றனர்.


பேருந்தில் கத்தியுடன் அலைந்த மாணவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு ஒரே மாதிரியாக வழுக்கி விழுந்து கையில் அடிபட்டுள்ளது. வசதி படைத்தவர்கள் தவறு செய்தால் அவர்களுக்கு கழிவறை வழுக்குவதில்லை’ என்று காட்டமாக பேசினார்.

Also see:

First published: July 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...