ஆர்யாவின் கை, கால் முதுகு எல்லாம் நடிக்குது... மகாமுனியை பாராட்டிய கே.வி.ஆனந்த்!

news18
Updated: September 3, 2019, 7:35 PM IST
ஆர்யாவின் கை, கால் முதுகு எல்லாம் நடிக்குது... மகாமுனியை பாராட்டிய கே.வி.ஆனந்த்!
கே.வி.ஆனந்த் | ஆர்யா
news18
Updated: September 3, 2019, 7:35 PM IST
மகாமுனி படத்தின் ஸ்னீக் பீக் காட்சியைப் பார்த்த இயக்குநர் கே.வி. ஆனந்த் படக்குழுவையும், ஆர்யாவையும் பாராட்டியுள்ளார்.

‘மௌன குரு’ படத்துக்கு பிறகு சாந்தகுமார் இயக்கிருக்கும் படம் மகாமுனி. ஆர்யா ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப்படத்தில் மஹிமா நம்பியார், இந்துஜா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஜுனியர் பாலையா, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இந்தப் படத்தின் டீசர் கடந்த மே மாதத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து செப்டம்பர் 6-ம் தேதி படம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வரும் படக்குழு படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை நேற்று வெளியிட்டனர். அக்காட்சியைப் பார்த்த இயக்குநர் கே.வி.ஆனந்த், “ஆர்யாவின் கை, கால் முதுகு எல்லாம் நடிக்குது. படக்குழுவுக்கும், ஆர்யாவுக்கும் பாராட்டுகள்” என்று கூறியுள்ளார்.இந்தப் படத்துக்கு தணிக்கையில் U/A சான்றிதழ் கிடைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிக்பாஸ்க்கு குட் பை சொல்கிறாரா கமல்... சிம்புவுக்கு வாய்ப்பு?வீடியோ பார்க்க: பிகினியில் அசத்தும் சமந்தா, த்ரிஷா, ரகுல் ப்ரீத் சிங்

First published: August 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...