KV Anand: 'நேற்று வரை என்னோடு பேசிக்கொண்டு இருந்தார்’ கே.வி.ஆனந்த் குறித்து சிம்பு உருக்கம்

KV Anand: 'நேற்று வரை என்னோடு பேசிக்கொண்டு இருந்தார்’ கே.வி.ஆனந்த் குறித்து சிம்பு உருக்கம்

கே.வி.ஆனந்த் - சிம்பு

ஒளிப்பதிவாளர் இயக்குநராகி வெற்றி பெற்றவர்களில் கே.வி.ஆனந்த் அவர்கள் முக்கியமானவர்.

  • Share this:
    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மரணம் திரையுலகை பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில் நடிகர் சிம்பு, கே.வி.ஆனந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், ‘அதிர்ந்து பேசாத நல்ல மனிதர் கே.வி.ஆனந்த் அவர்கள். ’கோ’ படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது. அப்போதிலிருந்த சூழலில் தவிர்க்கும்படியாகி விட்டது.

    Simbu Statement on KV Anand
    சிம்பு அறிக்கை


    சமீபத்தில் மிக அழகான கதை ஒன்றை எனக்குச் சொல்லியிருந்தார். சேர்ந்து படம் பண்ணலாம் எனச் சொல்லியிருந்தேன். தினமும் என்னோடு தொடர்பிலிருந்தார். நேற்றுவரை பேசிக் கொண்டிருந்தவர், இன்று அதிகாலை மரணமடைந்து விட்டார் என்பதை மனம் நம்ப மறுக்கிறது. பொய்ச் செய்தியாக இருக்கக் கூடாதா என அங்கலாய்க்கிறேன். இவ்வளவு சீக்கிரம் அவரை இழந்திருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது.

    ஒளிப்பதிவாளர் இயக்குநராகி வெற்றி பெற்றவர்களில் கே.வி.ஆனந்த் அவர்கள் முக்கியமானவர். நிச்சயம் பேசப்படும் நிறைய படங்களை தந்திருப்பார். அவசரமாக பயணித்து விட்டார் இறைவனிடம். திரையுலகத்துக்கு அவரது மறைவு பேரிழப்பு. அவரை இழந்து நிற்கும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். இறைவனின் கைகளில் அவர் இளைப்பாறட்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: