லிங்கா திரைப்படம் ரஜினிகாந்தின் தலையீட்டால் தான் தோல்வியை தழுவியதாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உரையாடல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் மூத்த கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவர் கே.எஸ்.ரவிக்குமார். இவரும் நடிகர் ரஜினிகாந்தும் இணைந்து முத்து, படையப்பா என இரு மாபெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தனர். மூன்றாவதாக லிங்கா படத்தில் இணைந்தனர். இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஆகியோரும் நடித்திருந்தனர். மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்படம் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் பிரபல யூ-ட்யூப் சேனலின் உரையாடல் ஒன்றில் பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், லிங்கா படத்தின் தோல்வி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில் பேசிய ரவிக்குமார், “லிங்கா படத்தின் கிளைமாக்சே வேற. அதில் பலூன் கிடையவே கிடையாது. ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருந்த போது, கொஞ்சம் கேப் கிடைத்தது. அப்போது என்ன பண்ணிட்டு இருக்கீங்க எடிட்டிங்ல, பாக்கலாமான்னாரு ரஜினி சார். லிங்கேஸ்வரன் கேரக்டர் ஃபுல்லா முடிஞ்சிடுச்சு சார், ஆனா நான் பாதிக்கும் மேல் ட்ரிம் பண்ண வேண்டியிருக்குன்னு சொன்னேன். சரின்னு பாத்தாரு. முதல் பாதியில் 1500 அடி ட்ரிம் செய்ய வேண்டும், இரண்டாம் பாதியில் இளமையான ரஜினிக்கு அதிக காட்சிகள் வரவேண்டும் என்று சொன்னேன். பாத்ததுக்கு அப்றம், தயவு செஞ்சு எதையும் ட்ரிம் பண்ணிடாதீங்க. லிங்கேசன் தான் படத்தின் கதாநாயகன். வில்லன சாகடிக்குறது மட்டும் இளமை தோற்றத்துக்கு கொடுங்க. படம் நல்லாருக்கும்ன்னு அவர் ரொம்ப ஃபீல் பண்ணி சொன்னாரு.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
முன்னணி மலையாள நடிகரை கரம் பிடிக்கும் நித்யா மேனன்?
அதனால இந்த கேரக்டருக்கு வேற என்ன பண்ணலாம்ன்னு பேசிட்டு இருக்கும் போது, நம்ம அசிஸ்டெண்ட்ஸ் 9 பேருக்குமே இது புடிக்கலை சார்ன்னு சொல்லிட்டாங்க. அதுக்கு முன்னாடி நாங்க பிளான் பண்ணிருந்தது நல்ல கிளைமேக்ஸ். அது பண்றதுக்கு முடில. எதாவது பண்ணி படத்தை ரிலீஸ் பண்ணி தான் ஆகணும்ங்கற கட்டாயத்துல இருந்தேன். எனக்கு புடிக்கலைங்கறத விட, ரிலீஸ் பண்ணனும்ங்கற பிரஷர் வேற. ஏன்னா 12-ம் தேதி அவர் பர்த்டேக்கு போன வருஷம் கோச்சடையான் வரும்ன்னு எதிர்பார்த்து வரல, ஸோ இந்த வருஷம் கண்டிப்பா லிங்கா வரணும்ன்னு ஏகப்பட்ட பிரஷர். அப்போ தான் ஷங்கர்லாம் நினைச்சுக்கிட்டேன். அவர மாதிரி தான் இருக்கணும். ஏன்னா, படம் முடிஞ்சி ஃபர்ஸ்ட் காபி பாத்து, திருப்தியா இல்லைன்னா, திரும்பவும் ரீ-ஷூட் பண்ணதுக்கு அப்றம் தான் பப்ளிசிட்டி ஆரம்பிச்சு, அதுக்கு அப்றம் தான் தேதியை அறிவிப்பாங்க” என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.