நெல்சன் இயக்கும் ரஜினியின் 169வது படத்தில் கே.எஸ். ரவிக்குமாரும் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஜினியின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது. சிவா இயக்கிய இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
இதையடுத்து ரஜினியின் 169வது படத்திற்கான அறிவிப்பு வெளியாகி அந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸே தயாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க - மீண்டும் தொடங்கியது ரஜினி - கமல் படங்களுக்கு இடையே வசூல் போட்டி
இந்த அறிவிப்பு பீஸ்ட் படத்திற்கு முன்பாக வெளியானதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளிவந்த விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் மிக மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டது.
குறிப்பாக விஜய் ரசிகர்கள் இந்தப் படத்தை கடுமையாக விமர்சித்திருந்தனர். இதனால் ரஜினிகாந்த் தனது அடுத்த படத்திற்கான இயக்குனரான நெல்சனை மாற்றுவாரா என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க - ராட்சசி பட இயக்குநருடன் இணைந்த அருள்நிதி...!
ஆனால் நெல்சனுடன் ரஜினியின் படம் தொடரும் என பின்னர் தகவல்கள் உறுதி செய்யப்பட்டன. தற்போது இந்த படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையில் நெல்சன் கவனம் செலுத்தி வருகிறார்.
ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு ஆரம்பம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ரஜினியின் அடுத்த படத்தில் கே.எஸ். ரவிக்குமார் இணைந்திருப்பதாகவும், அவர்தான் ரஜினி படத்திற்கான திரைக்கதையை வடிவமைத்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
பீஸ்ட் படத்தின் மேக்கிங் சிறப்பாக இருந்தாலும், அதன் திரைக்கதையால் ரஜினி அதிருப்தி அடைந்திருக்கிறார். இதையடுத்து திரைக்கதைக்கான பொறுப்பு படையப்பா, முத்து வெற்றிப் படங்களைக் கொடுத்த கே.எஸ். ரவிக்குமார் பக்கம் சென்றிருப்பதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.