ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

"தேர்தலில் போட்டியா?" கேள்வி கேட்டதும் படாரன பதிலளித்த கிருத்திகா உதயநிதி!

"தேர்தலில் போட்டியா?" கேள்வி கேட்டதும் படாரன பதிலளித்த கிருத்திகா உதயநிதி!

இயக்குனர் கிருத்திகா உதயநிதி, வாணி போஜன், தான்யா ரவிசந்திரன், அஷ்வின்

இயக்குனர் கிருத்திகா உதயநிதி, வாணி போஜன், தான்யா ரவிசந்திரன், அஷ்வின்

இயக்குனர் கிருத்திகா உதயநிதி, வாணி போஜன், தான்யா ரவிசந்திரன், அஷ்வின் உள்ளிட்ட நடிகர்கள் நேற்று குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடியுள்ளனர்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு அதைப்பற்றி யோசித்தது கூட கிடையாது என இயக்குநர் கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார்.

  “உதவும் உள்ளங்கள்” என்ற தொண்டமைப்பு வருடந்தோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஒன்று திரட்டி அவர்களுக்காக “ஆனந்த தீபாவளி” என்ற நிகழ்வை நடத்தி வருகின்றனர். “ஆனந்த தீபாவளி”யின் 25வது வருடமான இந்த ஆண்டில் பல குழந்தைகள் நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டனர்.

  நேற்று நடந்த இந்நிகழ்வில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி மற்றும் நடிகைகள் வாணி போஜன், தான்யா ரவிசந்திரன் மற்றும் நடிகர் அஷ்வின் கலந்து கொண்டு குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி கொண்டாடினர்.

  நிகழ்வில் பிரலங்கள் குழந்தைகளுடன் கொண்டாடிய தீபாவளி அற்புதமான நிகழ்வு என்று கூறி  “உதவும் உள்ளங்கள்” அமைப்பிற்கு தங்களது வாழ்த்துக்களை அவர்கள் தெரிவித்து கொண்டனர்.

  Also read... தெலுங்கில் என்ட்ரி கொடுக்கும் பிரியா பவானி சங்கர்.. போஸ்டருடன் புது பட அப்டேட்!

  இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கிருத்திகா உதயநிதி, 18 ஆதரவற்ற இல்லங்களுடன் இணைந்து நாங்கள் இந்த தீபாவளியை கொண்டாடினோம். 25 ஆண்டுகளாக இதை உதவும் உள்ளங்கள் என்ற தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார்கள். அவர்களுடன் நாங்களும் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

  மேலும் கிருத்திகா உதயநிதியிடம், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அப்படியெல்லாம் நான் யோசித்தது கூட கிடையாது என அவர் பதிலளித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Entertainment