Director Kathir: 19 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமாவில் ரீ எண்ட்ரியாகும் இயக்குநர் கதிர்

இயக்குநர் கதிர்

19 வருடங்களுக்குப் பிறகு சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறார் இயக்குநர் கதிர்.

  • Share this:
    இயக்குநர் கதிர் 19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கவிருக்கிறார்.

    நடிகர் முரளி நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான ‘இதயம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கதிர். காதலை சொல்லாமல் கடைசி வரை ஒருதலை காதலோடு இருப்பவர்களுக்கு இதயம் முரளி எனப் பெயர் வரக் காரணம் இந்தப் படம் தான்.

    இதையடுத்து ‘காதலர் தினம்’, ‘காதல் தேசம்’ போன்ற படங்களை இயக்கினார். இந்தப் படங்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. தமிழில் இவர் கடைசியாக இயக்கிய படம் காதல் வைரஸ். 2002-ம் ஆண்டு வெளியான இப்படம் தோல்வியை தழுவியது. இதையடுத்து அவர் படங்களை இயக்கவில்லை.

    Director Kathir all set to make his re entry in Tamil Cinema, director kathir first movie, director kathir date of birth, director kathir movies tamil, director kathir movies list in tamil, director kathir upcoming movies, director kathir wife, director kathir movie list tamil, where is director kathir now, director kathir movies, இயக்குநர் கதிர், இயக்குனர் கதிர் திரைப்படங்கள், இயக்குநர் கதிர், இயக்குநர் கதிரின் வரவிருக்கும் படங்கள், கதிர் இயக்குநர்
    கிஷோருடன் இயக்குநர் கதிர்


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், தற்போது மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறார் இயக்குநர் கதிர். அவர் இயக்கும் புதிய படத்தில் புதுமுக நாயகன் கிஷோர் நடிக்க உள்ளார். ஆர்.கே.இண்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. தற்போது இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

    காதல் படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் கதிரின் அடுத்தப் படத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: