Karthik Subbaraj: கன்னட படமான சார்லி 777-ஐ தமிழில் வெளியிடும் கார்த்திக் சுப்புராஜ்!

கார்த்திக் சுப்பராஜ் - சார்லி 777

777 சார்லி படத்தை தமிழில் தனது ஸ்டோன் பென்ச் கிரியேஷன் சார்பில் கார்த்திக் சுப்புராஜ் வெளியிடுகிறார்.

  • Share this:
    கன்னடத்தில் தயாரான 777 சார்லி படத்தின் தமிழ் பதிப்பை கார்த்திக் சுப்பாராஜ் வெளியிடுகிறார். நாயின் அன்பை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது.

    கார்த்திக் சுப்பாராஜின் ஸ்டோன் பென்ச் கிரியேஷன், அவியல், மேயாதமான், பென்குவின் ஆகிய படங்களை தயாரித்துள்ளது. கள்ளச்சிரிப்பு சீரிஸை இந்நிறுவனமே வெளியிட்டது. தற்போது கன்னடத்தில் தயாராகியிருக்கும் 777 சார்லி படத்தை தமிழில் தனது ஸ்டோன் பென்ச் கிரியேஷன் சார்பில் கார்த்திக் சுப்பாராஜ் வெளியிடுகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    777 சார்லி திரைப்படம் ஒரு இளைஞனுக்கும், அவனது நாய்க்கும் இடையில் நடைபெறும் கதை. இவர்கள் இருவருக்குள் இருக்கும் நிபந்தனையற்ற அன்பை சொல்வது. ரக்ஷித் ஷெட்டி பிரதான வேடத்தில் நடிக்க, கிரண்ராஜ் படத்தை இயக்கியுள்ளார். ஐந்து மொழிகளில் இது வெளியாகிறது.

    777 சார்லியின் மலையாள பதிப்பை பிருதிவிராஜ் புரொடக்ஷன்ஸ் சார்பாக நடிகர் பிருத்விராஜ் வெளியிடுகிறார். படத்தின் சில காட்சிகளைப் பார்த்தாகவும், அவை சிறப்பாக இருப்பதாகவும் சிலாகித்து கூறியுள்ளார் பிருத்விராஜ். படத்தின் நாயகன் ரக்ஷித் ஷெட்டியுடன் இணைந்து ஜிஎஸ்.குப்தா இப்படத்தை தயாரித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: