முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Jigarthanda 2: ஜிகர்தண்டா 2 படத்தின் வேலைகளை தொடங்கிய கார்த்திக் சுப்புராஜ்!

Jigarthanda 2: ஜிகர்தண்டா 2 படத்தின் வேலைகளை தொடங்கிய கார்த்திக் சுப்புராஜ்!

ஜிகர்தண்டா 2

ஜிகர்தண்டா 2

‘ஜிகர்தண்டா 2’ படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும், ராகவா லாரன்ஸும் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 1, 2022 அன்று, 'ஜிகர்தண்டா' திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆனதையொட்டி, அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அறிவித்துள்ளார். அதோடு அவர் ‘ஜிகர்தண்டா 2’ படத்திற்கான பணிகளை விரைவில் தொடங்க உள்ளதாக ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தியின் போது, அவருக்கு அருகில் ‘ஜிகர்தண்டா 2’ படத்தின் ஸ்கிரிப்டை வைத்து வழிப்பட்ட படத்தையும் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார் கார்த்திக் சுப்புராஜ்.

அதோடு அந்தப் படத்திற்கு, “ஜிகர்தண்டா 2... இன்றிலிருந்து ஃப்ரீ புரொடக்‌ஷன் ஆரம்பமாகிறது. வேறு சில குற்றங்களும்... ஒரு கலையும்” என தலைப்பிட்டிருந்தார். 'ஜிகர்தண்டா 2' படத்தில் பாபி சிம்ஹா நடிப்பார் என்றும், அவர் படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் காணப்படுவார் என்றும் ஊகங்கள் எழுந்துள்ளன. அதோடு ‘ஜிகர்தண்டா 2’ படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும், ராகவா லாரன்ஸும் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

விவாகரத்து, சக நடிகருடன் நெருக்கம், தயாரிப்பாளருடன் இரண்டாவது திருமணம் - சீரியல் நடிகை மகாலட்சுமி ஆல்பம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருப்பதாகவும், படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் ‘ஜிகர்தண்டா’ படத்தில் பணியாற்றியவர்களே என்றும் கூறப்படுகிறது. மேலும் நடிகர்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Karthik subbaraj